SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நாடு முழுவதும் வறட்சியின் பிடியில் 153 மாவட்டங்கள்

2018-04-16@ 21:04:20

புதுடெல்லி: இந்திய துணை கண்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு ஆகிய இரண்டு பருவ மழைகள் பெய்து வருகின்றன. இந்தியா முழுமைக்கும் தென்மேற்கு பருவமழையும், தமிழகமும் அதனை ஒட்டிய சில பகுதிகள் மட்டும் வடகிழக்கு பருவ மழையையும் நம்பியுள்ளன. கடந்த ஆண்டு வழக்கத்தை காட்டிலும் குறைவாகவே மழை பெய்தது. இந்த ஆண்டு இயல்பான அளவு மழை பெய்யும் என கணக்கிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த 2017 அக்டோபர் முதல் 2018 மார்ச் வரை 140 மாவட்டங்கள் மழை இல்லாததால் மிக கடுமையாக வறண்டுள்ளன. மற்ற 109 மாவட்டங்கள் பாதியளவும், 156 மாவட்டங்கள் சிறிதளவும் வறண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை நாடு முழுவதும் உள்ள 153 மாவட்டங்கள் கடுமையான வறட்சியை சந்தித்து வருகின்றன. ஒவ்வொரு ஆண்டும் கோடையில் நாட்டின் பல பகுதிகள் தண்ணீர் பஞ்சத்தை எதிர்நோக்க வேண்டியாக இருந்தாலும், இந்த ஆண்டு மழைக்காலத்தின் போது பல பகுதிகளில் மழை இல்லை. இதனால் கோடையில் அப்பகுதிகள் மிக அதிக அளவில் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • bangladesh_accd1

    1,134 உயிர்களை பலிகொண்ட ஆடை தொழிற்சாலை விபத்தின் 5ம் ஆண்டு நினைவு தினம் வங்கதேசத்தில் அனுசரிப்பு

  • nationalpanchayat

    தேசிய பஞ்சாயத்து ராஜ் கூட்டம் : பிரதமர் மோடி பங்கேற்பு

  • turkey_building11

    துருக்கியில் பயங்கர நிலநடுக்கம் : 39 பேர் காயம் ; கட்டிடங்கள் இடிந்து தரைமட்டம்

  • saamiyarrape129

    சாமியார் ஆஸ்ராம் மீதான பாலியல் வழக்கு : நல்ல தீர்ப்பு வேண்டி ஆதரவாளர்கள் பிரார்த்தனை; 3 மாநிலங்களில் பலத்த பாதுகாப்பு

  • 25-04-2018

    இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்