SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மாட்டு வண்டிகளில் அள்ள அனுமதி கோரி பனையக்குறிச்சி மணல் குவாரி முற்றுகை

2018-04-16@ 20:34:51

திருவெறும்பூர்: திருச்சி பனையக்குறிச்சியில் மாட்டு வண்டி தொழிலாளர்களுக்கு மணல் குவாரி அமைத்து தர கோரி, கடந்த மார்ச் 5ல் முற்றுகை போராட்டம் நடத்துவதாக சிஐடியு மாட்டு வண்டி தொழிலாளர் அமைப்பினர் அறிவித்தனர். அன்று பேச்சுவார்த்தை நடத்திய கனிமம் மற்றும் கண்காணிப்பு கோட்ட செயற்பொறியாளர் மாட்டு வண்டிகளுக்கு மணல் குவாரி அமைத்து தருவதாகவும், ராமசமுத்திரம், அய்யாளம்மன் படித்துறை, முருங்கபேட்டை, வேங்கூர், அப்பாதுறை உள்ளிட்ட இடங்களிலும் குவாரி அமைத்து தருவதாகவும் உறுதி அளித்தார். ஆனால் 40 நாளுக்கு மேலாகியும் குவாரி அமைக்கப்படவில்லை.

இதற்கிடையே தமிழக அரசு முதல்கட்டமாக பனையக்குறிச்சி காவிரி ஆறு உள்ளிட்ட 14 இடங்களில் மணல் குவாரி அமைத்துள்ளது. 10 நாளாக இயங்கிவந்த பனையக்குறிச்சி குவாரிக்கு தற்போது சமயபுரம் தேர்த் திருவிழாவையொட்டி போக்குவரத்து இடையூறு ஏற்படாமல் இருக்க இன்றும், நாளையும் விடுமுறை விடப்பட்டுள்ளது. ஆனால் குவாரியில் இன்று 3 பொக்லைன்கள் மூலம் மணல் குவிக்கும் பணி மும்முரமாக நடந்தது. இதை கண்டித்து மாட்டுவண்டி குவாரி அமைக்க வலியுறுத்தியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி விவசாய சங்க மாவட்ட தலைவர் சுப்ரமணி தலைமையில் அங்கு திரண்ட மாட்டு வண்டி தொழிலாளர்கள் பொக்லைன் இயந்திரங்களை சிறைபிடித்து குவாரியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பொதுப்பணித்துறை ஊழியர் தங்கையன் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் அவர் செயற்பொறியாளரிடம் போனில் பேசினார். தங்கையன் கூறுகையில், திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலை கிழக்கு பகுதியில் சர்க்கார்பாளையம் ரூட்டில் 3 மாட்டுவண்டி மணல் குவாரி அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பனையபுரம் மணல் குவாரியில் மாட்டுவண்டிகள் செல்ல 3 பாதை பார்த்துள்ளோம். ஒரு வாரத்தில் பாதை அமைத்து குவாரி அமைத்து தரப்படும் என உறுதி அளித்தார்.

இதனால் அவர்கள் கலைந்துசென்றனர். ஒரு வாரத்தில் குவாரி அமைக்காவிட்டால் போராட்டம் தொடரும் என்றனர். கேமரா செயல்படுகிறதா?: பனையபுரம் குவாரியை கண்காணிக்க பொன்னிடெல்டா பாதையில் 2 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.
மேலும் குவாரிக்குள் ஒரு கேமரா உள்ளது. ஆனால் அவை மின்இணைப்பு கொடுக்கப்பட்டு செயல்படுகிறதா என்பது தெரியவில்லை.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-07-2018

    21-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • DryingClothingfestival

    சீனாவில் வருடாந்திர உலர்த்தும் ஆடை திருவிழா: பாரம்பரிய ஆடைகளை நெய்து விழாவை சிறப்பித்த பெண்கள்

  • unmanedbookshopchina

    சீனாவின் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மிகப்பெரிய ஆளில்லா புத்தக நிலையம் திறப்பு

  • newyork_steam_explosion

    நீராவி குழாய் வெடித்து சிதறியதில் புகை மண்டலமாக காட்சியளித்த நியூயார்க் நகரம்!

  • Apollo11NeilArmstrong

    நீல் ஆம்ஸ்ட்ராங் சந்திரனின் மேற்பரப்பில் கால்பதித்த தினம் இன்று: அரிய புகைப்படங்களின் தொகுப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்