SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அடகு வைத்த நிலத்தை மீட்டு தராததால் ஆத்திரம்: செல்போன் டவரில் ஏறி விவசாயிதற் கொலை மிரட்டல்

2018-04-16@ 20:32:56

மயிலாடுதுறை: நாகை மாவட்டம் குத்தாலம் அருகே எலந்தங்குடி பகுதியை ேசர்ந்தவர்  வின்சென்ட்(45). விவசாயி. கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு தனது தம்பி ஆரோக்கியதாசின் திருமணத்திற்காக தனக்கு சொந்தமான நிலத்தை வங்கி ஒன்றில் அடகு வைத்து பணம் கொடுத்துள்ளார்.  4 ஆண்டுகள் கடந்த நிலையில் வின்சென்ட் தனது நிலத்தை மீட்டுக்கொடுக்குமாறு பலமுறை கேட்டும் ஆரோக்கியதாஸ் நிலத்தை மீட்டு கொடுக்கவில்லை. இதுகுறித்து பெரம்பூர் காவல் நிலையத்தில் வின்சென்ட் புகார் அளித்தும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த வின்சென்ட் இன்று காலை எலந்தங்குடியில் உள்ள செல்போன் டவரில் ஏறி தற்கொலைக்கு முயன்றார். தகவலறிந்த மயிலாடுதுறை டிஎஸ்பி வெங்கடேசன் மற்றும் பெரம்பூர் போலீசார், தீயணைப்பு மற்றும் மீட்புமடையினர் விரைந்து வந்து டவரின் மீதிருந்த வின்சென்டிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்து பாதுகாப்பாக கீழே இறக்கினர். தொடர்ந்து அவரை போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.  இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-07-2018

    23-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 22-07-2018

    22-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 21-07-2018

    21-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • DryingClothingfestival

    சீனாவில் வருடாந்திர உலர்த்தும் ஆடை திருவிழா: பாரம்பரிய ஆடைகளை நெய்து விழாவை சிறப்பித்த பெண்கள்

  • unmanedbookshopchina

    சீனாவின் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மிகப்பெரிய ஆளில்லா புத்தக நிலையம் திறப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்