SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பேராசிரியை நிர்மலாதேவி கைது: தவறு செய்தவர்கள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்க முடியாது...ஆளுநர்

2018-04-16@ 19:52:02

அருப்புக்கோட்டை: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே கல்லூரி மாணவிகளிடம் தவறாக பேசிய பேராசிரியை நிர்மலாதேவியை போலீசார் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் அருப்புக் கோட்டையில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் தேவாங்கர் கலைக்கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரில் கணிதத்துறை பேராசிரியை பணியாற்றிய நிர்மலாதேவி அதை கல்லூரியை சேர்ந்த 4 மாணவிகளிடம் தவறுதலான பாதையில் வழிநடத்தி செல்ல செல்போனில் பேசியுள்ளார். நான் சொல்லும் வி‌ஷயத்துக்கு நீங்கள் ஒத்துக்கொண்டால் படிப்பு வி‌ஷயத்திலும் நீங்கள் மேலே சென்று விடலாம், பொருளாதார ரீதியாகவும் உங்கள் குடும்ப கஷ்டம் தீர்ந்து விடும்,  பணமும் கிடைக்கும் என்று ஆசை வார்த்தைகளை செல்போனில் கூறியுள்ளார்.

இதற்கு மறுப்பு தெரிவித்து மாணவிகள் பெற்றோரிடம் பேராசிரியை நிர்மலாதேவி கூறியதை தெரிவித்துள்ளனர். இதனையடுத்து விசாரணை நடத்தி மதுரை பல்கலைக்கழகம் பேராசிரியை நிர்மலாதேவியை முதல்கட்ட நடவடிக்கையாக 15 நாட்கள் சஸ்பெண்டு செய்துள்ளனர். இச்சம்பவம் வைரலாக பரவிவரும் நிலையில் அனைத்து தரப்பில் இருந்தும் பேராசிரியை நிர்மலாதேவி மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர். இதனையடுத்து 2 பிரிவுகளின் கீழ் நிர்மலாதேவி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில் இன்று 5 மணி நேர கண்ணாமூச்சி போராட்டத்துக்குபின் வீட்டின் பூட்டை உடைத்து நிர்மலாதேவியை போலீசார் கைது செய்தனர்.

ஆளுநர் உத்தரவு: பேராசிரியை நிர்மலாதேவி மீதானபுகார் குறித்து விசாரிக்க ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உத்தரவிட்டுள்ளார். ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்தானம் தலைமையில் விசாரணை நடைபெறும் என்றும், இந்த விவகாரத்தில் தவறு செய்தவர்கள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்க முடியாது எனவும் ஆளுநர் கூறியுள்ளார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • MummifiedFoal

    42 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இறந்த குதிரையின் உடலில் உறைந்த ரத்தம்..: ரஷ்ய விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

  • SriLankaHomage

    இலங்கை தொடர் வெடிகுண்டு தாக்குதலுக்கு உலகச் சமூகங்கள் அஞ்சலி: பிரான்சின் ஈபிள் டவரில் விளக்குகள் அணைப்பு!

  • selphiGorilla

    கொரில்லாக்களையும் விட்டு வைக்காத செல்ஃபி மோகம் : குஷியான போஸ்கள்

  • QingdaoNavalParade

    சீனாவில் நடைபெறவுள்ள பிரம்மாண்ட கப்பல் அணிவகுப்பை ஒட்டி துறைமுகம் வந்தடையும் பல்வேறு நாடுகளின் போர்க்கப்பல்கள்!

  • CaucaLandslide

    கொலம்பியாவில் கனமழை காரணமாக ஏற்பட்ட திடீர் நிலச்சரிவில் சிக்கி 14 பேர் பலி..: மீட்பு பணிகள் தீவிரம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்