SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கதுவா சிறுமி குடும்பத்துக்கு பாதுகாப்பு அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

2018-04-16@ 17:43:38

புதுடெல்லி: ஜம்மு-காஷ்மீர் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் அம்மாமாநில அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கதுவா சிறுமி ஆசிபாவின் பெற்றோருக்கு பாதுகாப்பு வழங்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிறுமி கதுவாவின் தந்தை, இந்த விசாரணையை அருகில் உள்ள சண்டிகருக்கு மாற்றப்பட வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு விசாரணையின் போது போலீசார் எந்த அளவிற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர் என நீதிபதிகள் கேட்டு அறிந்து கொண்டனர். விசாரணையின் போக்கு சரியாக நடந்து கொண்டிருக்கிறது என ஏற்று கொண்டனர்.

இந்த சிறுமியின் குடும்பத்தினர் மற்றும் அவரது வழக்கறிஞருக்கும் பாதுகாப்பு அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. சிறுமி வழக்கை வேறு நீதிமன்றத்திற்கு மாற்றுவது தொடர்பாக பதிலளிக்க ஜம்மு-காஷ்மீர் அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே பாதுகாப்பு வழங்கப்பட்டு வருவதாக மாநில அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜம்மு-காஷ்மீர் அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு மீதான விசாரணை 28-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • france_park_machine

    பிரான்ஸ் நாட்டில் ஹாலிவுட் படக்காட்சிகளை போல் வடிவமைக்கப்பட்ட எந்திர பூங்கா!

  • madurai_meenut11

    மதுரை மீனாட்சி அம்மன் சித்திரை திருவிழா: மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடையுடன் விதி உலா

  • berlin_bomb_war

    இரண்டாம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட சக்திவாய்ந்த வெடிகுண்டு, பெர்லின் நகரில் கண்டுபிடிப்பு!

  • 10schooldata

    10ம் வகுப்பு பொதுதேர்வு நிறைவு எதிரொலி : மாணவர்கள் கலர் தூவி பிரியா நட்பை வெளிப்படுத்தி மகிழ்ந்தனர்

  • governor_palace11

    பெண்களை இழிவுப்படுத்தும் ஹெச்.ராஜா, எஸ்.வி. சேகரை கண்டித்து ஆளுநர் மாளிகை முற்றுகையிட்டு போராட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்