SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

விரைவுச் சாலை மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனங்களின் வேகம் அதிகரிப்பு

2018-04-16@ 17:42:41

டெல்லி: விரைவுச் சாலைகளில் கார்கள் செல்வதற்கான வேகதத்தை நெடுஞ்சாலைதுறை அதிகரித்துள்ளது. விரைவுச் சாலைகளில் செல்லும் கார்களின் அதிகபட்ச வேகத்தை மணிக்கு 100 கிலோமீட்டரில் இருந்து 120 கிலோமீட்டராக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் வாடகைக் கார்களுக்கு வேகம் மணிக்கு 80 கிலோமீட்டரில் இருந்து 100 கிலோமீட்டராக அதிகரிக்கப்பட்டுள்ளது.

தேசிய நெடுஞ்சாலைகளில் செல்லும் கார்களின் அதிகபட்ச வேகத்தை மணிக்கு 100 கிலோமீட்டராகவும், டாக்சி மற்றும் கேப் போன்ற வாடகைக் கார்களுக்கு 90 கிலோமீட்டராகவும் உயர்த்தப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலைகளில் செல்லும் இரு சக்கர வாகனங்கள் மற்றும் வர்த்தக வாகனங்களின் வேக வரம்பு மணிக்கு 80 கிலோமீட்டராக உயர்த்தப்பட்டுள்ளது.

நகரச்சாலைகளில் செல்லும் கார்கள் மற்றும் டாக்சிகளுக்கு வேக வரம்பு மணிக்கு 70 கிலோமீட்டராகவும், இருசக்கர வாகனங்களுக்கு மணிக்கு 60 கிலோமீட்டராகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதிகரிக்கப்பட்டுள்ள வேகம் விரைவுச்சாலைகள் மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளுக்கு மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தேவையான இடங்களிலும் குறைந்த வேக மண்டலங்களிலும் அதற்குரிய வேகத்தையே பின்பற்ற வேண்டும் என்று நெடுஞ்சாலைதுறை அறிவுறுத்தியுள்ளது. சிறுநகரங்கள், கிராமங்கள் வழியாக கடக்கும் சாலைகளில் இந்த வேகவரம்பு பொருந்தாது என்றும் தெரிவித்துள்ளது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • SnakesDayatGuindy

    சென்னை கிண்டி பாம்புப்பண்ணையில் உலக பாம்புகள் தினம் கொண்டாடப்பட்டது

  • PMspeachshellfellwb

    மேற்குவங்கத்தில் பிரதமர் உரையின்போது கொட்டகை சரிந்து விழுந்தது: காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதி

  • BastilleDaycelebration

    பிரான்ஸ் நாட்டின் தேசிய தினம் கொண்டாட்டம்: 100 விமானங்களின் சாகச நிகழ்ச்சி

  • BodyPaintingFestival

    உடல் ஓவியத் திருவிழா 2018: வித்தியாசமான தோற்றத்தில் மாடல்கள்

  • 21stAnnualMudfestival

    தென்கொரியாவில் 21வது வருடாந்திர சேறு தின விழா கொண்டாட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்