SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வண்டலூர் பூங்காவில் உள்ள விலங்குகளை இனி ஆன்லைனில் நேரடியாக கண்டுகளிக்கலாம்

2018-04-16@ 17:31:23

சென்னை: வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகளை ஆன்லைனில் கண்டுகளிக்க புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவுக்கு ஆண்டுதோறும் சுமார் 25 லட்சம் பார்வையாளர்கள் வருகை புரிகின்றனர். அங்குள்ள விலங்குகளை குடும்பத்துடன் அல்லது நண்பர்களுடன் வந்து ரசித்து செல்கிறார்கள். தமிழகம் மட்டுமில்லாமல் நாட்டின் பிற மாநிலங்களில் இருந்தும், வெளிநாட்டில் இருந்தும் அதிக அளவில் பார்வையாளர்கள் வருகின்றனர்.

இந்நிலையில், வண்டலூர் பூங்கா நிர்வாகம் ஆன்லைன் மூலம் நேரடி ஒளிபரப்பு செய்யும் புதிய வசதியை தமிழ் புத்தாண்டு முதல் தொடங்கியுள்ளது. இதன்படி தற்போதைக்கு 4 வன உயிரினம் மட்டும் வெளியிடப்பட்டுள்ளது. அடுத்த ஓரிரு தினங்களில் பிற வன உயிரினங்களையும், அவற்றின் அனைத்து உயிரியல் செயல்பாடுகளையும் நேரடியாக ஆன்லைன் மூலம் காணலாம் என பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த வசதியை www.aazp.in என்ற இணையதளத்தில் காண முடியும்.

மேலும், இரவு முழுவதும் தங்கி காலையில் பூங்காவை சுற்றிப் பார்க்கும் புதிய வசதியும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான முன்பதிவுகளை பூங்காவின் இணையதளம் www.aazp.in மற்றும் https://www.aazp.in/room_search/ என்ற இணைப்பின் மூலமாகவும் முன்பதிவு செய்யலாம். இந்த வசதி மூலம் வரும் பார்வையாளர்கள் மாலை 6 மணிக்கு பூங்காவின் ஓய்வு விடுதிக்கு வந்து, இரவு நேரம் தங்கி, மறுநாள் காலை 9 மணிக்கு பேட்டரி கார் மூலம் பூங்காவை சுற்றிப் பார்த்து கண்டுகளிக்கலாம்.

இதன்மூலம் சிங்கம் மற்றும் மான் உலாவிடத்தையும் அருகில் சென்று பார்க்கும் சவாரி அனுபவத்தையும் பெற முடியும். மொத்தம் 90 நிமிடங்கள் இந்த வசதி மூலம் பார்வையாளர்கள் சுலபமாக பூங்காவையும், அதில் உள்ள வன விலங்குகளையும் கண்டுகளிக்க முடியும். இதற்கு கட்டணமாக இரு பெரியவர்களுக்கு ரூ.2000 மற்றும் வரி, கூடுதலாக தங்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் ரூ.500 மற்றும் வரியும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • france_park_machine

    பிரான்ஸ் நாட்டில் ஹாலிவுட் படக்காட்சிகளை போல் வடிவமைக்கப்பட்ட எந்திர பூங்கா!

  • madurai_meenut11

    மதுரை மீனாட்சி அம்மன் சித்திரை திருவிழா: மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடையுடன் விதி உலா

  • berlin_bomb_war

    இரண்டாம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட சக்திவாய்ந்த வெடிகுண்டு, பெர்லின் நகரில் கண்டுபிடிப்பு!

  • 10schooldata

    10ம் வகுப்பு பொதுதேர்வு நிறைவு எதிரொலி : மாணவர்கள் கலர் தூவி பிரியா நட்பை வெளிப்படுத்தி மகிழ்ந்தனர்

  • governor_palace11

    பெண்களை இழிவுப்படுத்தும் ஹெச்.ராஜா, எஸ்.வி. சேகரை கண்டித்து ஆளுநர் மாளிகை முற்றுகையிட்டு போராட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்