SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு பரிசுத் தொகை அறிவிப்பு

2018-04-16@ 16:37:34

சென்னை: 21-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில், டேபிள் டென்னிஸ், ஸ்குவாஷ் போட்டியில் வெள்ளிப்பதக்கம் மற்றும் வெண்கல பதக்கம் வென்ற 5 தமிழக வீரர்களுக்கு ரூ.2 கோடியே 20 லட்சம் உயரிய ஊக்க தொகை முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, 21-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில், டேபிள் டென்னிஸ் ஆடவர் இரட்டையர் பிரிவில் வெள்ளிப்பதக்கம் மற்றும் ஆடவர் தனிநபர் பிரிவில் வெண்கலப் பதக்கமும் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர் சரத் கமலுக்கு 50 லட்சம் ரூபாய் உயரிய ஊக்க தொகை அறிவித்துள்ளார்.

ஸ்குவாஷ் மகளிர் இரட்டையர் பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்ற ஜோஸ்னா சின்னப்பாவுக்கு ரூ 30 லட்சமும், டேபிள் டென்னிஸ் ஆடவர் இரட்டையர் பிரிவில் வெள்ளி, கலப்பு இரட்டையர் பிரிவில் வெண்கலம் வென்ற சத்தியனுக்கு ரூ 50 லட்சம், ஸ்குவாஷ் மகளிர் இரட்டையர் பிரிவில் வெள்ளி, கலப்பு இரட்டையர் பிரிவில் வெள்ளி வென்ற தீபிகாவுக்கு ரூ.60 லட்சம் ஊக்கத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. பதக்கம் பெற்றவர்களுக்கு தனித்தனியாக எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-10-2018

    23-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • longestseabridge

    உலகில் எங்கும் இல்லாத தனிச்சிறப்புடன் கட்டி முடிக்கப்பட்ட உலகின் நீளமான கடல் பாலம்

  • delhi_strikepetrol18

    டெல்லியில் பெட்ரோல் பங்குகள் ஸ்டிரைக்: கால் டாக்சி, ஆட்டோ சேவைகள் முடக்கம் !

  • solarcar_race

    சூரிய மின்சக்திகளால் இயங்கும் கார்களுக்கான பந்தயம் சிலி நாட்டில் கொண்டாட்டம்!

  • hondurans_americatrump

    ஹோண்டராஸில் இருந்து அமெரிக்கா நோக்கி நடைபயணம் மேற்கொள்ளும் அகதிகள் !

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்