SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பாலியல் ஆசையை காட்டிய பேராசிரியர் பேச்சை ஏற்க முடியாதது...கருப்பு ஆடுகள் களையெடுக்கப்படும் : அமைச்சர் ஜெயக்குமார்

2018-04-16@ 15:15:02

சென்னை: கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் ஆசையை காட்டிய பேராசிரியை நிர்மலா தேவி மீது அரசு உறுதியாக நடவடிக்கை எடுக்கும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் மாணவிகளிடம் பேராசிரியை நிர்மலா பேசிய ஆடியோவை தாமும் கேட்டதாக கூறியுள்ளார். மாணவிகளை தவறான பாதையில் அழைத்து செல்லும் பேராசிரியை நிர்மலாவின் அணுகுமுறைக்கு கண்டனம் தெரிவித்துள்ள அமைச்சர் அமைச்சர் ஜெயக்குமார் அதை ஒருபோதும் ஏற்க முடியாது என்றார்.

மாணவிகளுக்கு பாலியல் ஆசை காட்டிய நிர்மலா மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை வலுத்து வருகிறது. நிர்மலாவின் பின்னணியில் உள்ளவர்கள் குறித்த உண்மையை வெளிக்கொண்டுவர சிபிஐ விசாரணைக்கு உத்தரவேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

5 பேர் கொண்ட குழு அமைப்பு

மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற பேராசிரியை நிர்மலா தேவி விவகாரம் குறித்து விசாரிக்க 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. மதுரை காமராஜர் பல்கலை. கணிதத்துறை தலைவர் லெல்லீஸ் திவாகர் தலைமையில் 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அதில் சிண்டிகேட் உறுப்பினர்கள் லெல்லிஸ் திவாகர், ஆண்டியப்பன், பேராசிரியர்கள் ஜெயபாரதி, வரலட்சுமி, ராஜதபலா ஆகியோர் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • NagoroJapanVillage

    ஜப்பானில் உள்ள தீவில் வெறிச்சோடிய கிராமத்தை பொம்மைகளால் உயிரூட்டிய பெண்: குவியும் சுற்றுலா பயணிகள்

  • FallFoilageWorld

    உலகின் பல்வேறு நாடுகளில் எடுக்கப்பட்ட இலையுதிர் காலத்தின் அழகிய புகைப்படங்கள்

  • WillaHurricaneMexico

    மெக்சிகோவை மிரட்டவிருக்கும் வில்லா புயல்: முன்னேற்பாடு பணிகள் தீவிரம்

  • italyrain

    இத்தாலியில் பெய்த ஆலங்கட்டி மழை : பனிக்கட்டிகள் இறுகி பாறை போல் காட்சியளித்த சாலைகள்

  • 23-10-2018

    23-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்