SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தமிழகத்தில் ஒரே நாளில் வேவ்வேறு இடங்களில் 4 பேர் கொலை

2018-04-16@ 12:35:54

சென்னை: தமிழகத்தில் ஒரே நாளில் வேவ்வேறு இடங்களில் மூதாட்டி உள்பட 4 பேர் கொலை செய்யப்பட்டது அதிரிச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மேடபாக்கம் அடுத்த காந்தி நகரில் வசித்து வந்த சீனிவாசன் என்பவர் மீன் வியாபாரியான இவர் வீட்டு அருகே சாலையில் நடந்து சென்றுக்கொண்டிருந்த போது வழிமறித்த மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டியுள்ளனர். உயிருக்க பயந்து ஓடிய சீனிவாசனை ஒடஒட விரட்டி வெட்டியதில் தலை, கழுத்தில் காயம் ஏற்பட்டு உயிரிழந்தார். கன்னியாகுமரி மாவட்டம்  குலசேகரம் அடுத்த அண்டூரில் ஜெயகுமார் என்ற கூலி தொழிலாளி வெட்டி கொலை செய்யப்பட்டார். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே குரும்பரத்தில் பெரியசாமி என்ற விவசாயி அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். கும்பகோணம் அருகே மூதாட்டியை கொன்றுவிட்டு பத்து சவரன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். ஒரே நாளில் வேவ்வேறு இடங்களில் 4 பேர் கொலை செய்யப்பட்டு இருப்பது மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது. 

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • cmathleticstale

    மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பை தடகள போட்டி : அமைச்சர் பாலகிருஷ்ணா தொடங்கி வைத்தார்

  • tiruchurpooram

    கேரளாவில் பிரசித்திப் பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா : கோலாகலமாக நடந்தது

  • saintjordysayspain

    செயிண்ட் ஜோர்டி தினம் : ஸ்பெயினில் ஒருவருக்கொருவர் புத்தகங்கள், மலர்கள் பரிசளித்து கொண்டாட்டம்

  • bookfairchennai

    உலகப் புத்தக தினத்தையொட்டி சென்னை கன்னிமரா நூலகத்தில் நடைபெற்ற புத்தக கண்காட்சி நிறைவு

  • 26-04-2018

    26-04-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்