SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தீ மிதிப்போருக்கு காயம் ஏற்படாதது எப்படி?

2018-04-16@ 09:53:04

பொதுவாக கோயில்களில் தீ மிதிப்பவர்கள் தங்கள் கால்களில் தண்ணீரை ஊற்றிக்கொண்ட பிறகே தீமிதிக்க இறங்குகிறார்கள். அவ்வாறு தீமிதிக்கும் போது அவர்களின் பாதங்களில் உள்ள நீர் மற்றும் வியர்வை தீயின் வெப்பத்தினால் நீராவியாக மாறிவிடுகிறது. அவ்வாறு உருவான நீராவிப்படலத்தின் மீதே அவர்கள் நடக்கிறார்கள். இது ஒரு கணநேர நிகழ்வாகும். இவ்வாறு பாதங்களைச் சுற்றிப்பரவியுள்ள நீராவிப்படலமானது குறைந்த வெப்பநிலையில் இருப்பதோடு, குறைந்த வெப்பக்கடத்தியாகவும் செயல்பட்டு தீக்குண்டங்களில் உள்ள நெருப்பின் வெப்பம் பாதங்களைக் தாக்காதவாறு செயல்படுகிறது.

மேலும் கரித்துண்டுகளைப் பொருத்தளவில் மற்ற எரியும் பொருட்களை விட குறைந்த வெப்பநிலையில் இருக்கும். குறைந்த வெப்பக்கடத்தியாகவும் செயல்படும். எனவே தீக்கங்குகளில் உள்ள வெப்பம் அதன்மீது விரைவாக நடந்து செல்பவர்களின் பாதங்களை அதிகம் பாதிப்பதில்லை. நெருப்புக் கங்குகளின் மீது நடந்து செல்கின்ற மனிதனால் சூடான உலோகத் தகடுகளின் மீது நடக்க முடியாது. காரணம் அவை அதிகச் சூடாகவும், அதிக வெப்பக்கடத்தியாகவும் இருப்பதேயாகும்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • CrocodilesIndonesia

    300 முதலைகளை ஒரே நேரத்தில் கொன்று குவித்த கிராம மக்கள்: இந்தோனேஷியாவில் பயங்கரம்

  • trumpputinmeet

    பின்லாந்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் - ரஷ்ய அதிபர் புதின் இடையே முக்கிய பேச்சுவார்த்தை

  • obamakenya

    கென்யா சென்ற முன்னாள் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவிற்கு மக்கள் உற்சாக வரவேற்பு

  • 17-07-2018

    17-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • SnakesDayatGuindy

    சென்னை கிண்டி பாம்புப்பண்ணையில் உலக பாம்புகள் தினம் கொண்டாடப்பட்டது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்