SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

தமிழகத்தில் 4 ஆயிரம் பாசன உதவியாளர் பணியிடங்கள் காலி: அவசர காலங்களில் அணை, ஏரிகளில் நீர் திறப்பதில் சிக்கல்

2018-04-16@ 00:31:55

சென்னை: தமிழகம் முழுவதும் 4 ஆயிரம் பாசன உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால்,  அவசர காலகட்டங்களில் அணை,  ஏரிகளில் இருந்து தண்ணீர் திறந்து விடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தமிழக பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 89 அணைகள், 14 ஆயிரத்து 98 ஏரிகள் உள்ளன. இந்த அணை, ஏரிகள் மூலம் ேசமித்து வைக்கப்படும் நீர்,  விவசாய பாசனத்திற்காகவும், குடிநீர் தேவைக்கும் பெரிதும் பயன்படுகிறது. ஏரிகள் மற்றும் அணை பகுதிகளை கண்காணிப்பதற்காக பாசன உதவியாளர்  பணி அமர்த்தப்படுகின்றனர். இவர்கள், ஏரியில் இருந்து தண்ணீர் திறப்பது, ஆக்கிரமிப்பு குறித்து ஆய்வு செய்வது, மழைக் காலங்களில் அவசர கால  நடவடிக்கை மேற்கொள்வது உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த 1990ம் ஆண்டுக்கு முன்பு இதுபோன்ற பணிகளை மேற்கொள்ள ஒரு சிறிய மற்றும் பெரிய ஏரிப்பகுதிகளில் 1 முதல் 5 பாசன உதவியாளர்கள்   பணியமர்த்தப்பட்டனர். இவர்கள், தினக்கூலி மற்றும் மாத தொகுப்பூதிய அடிப்படையில் பணிபுரிந்தனர். அவர்களுக்கு ரூ.100 முதல் ரூ.150 வரை  ஊதியம் வழங்கப்பட்டது. நாளடைவில் அவ்வாறு பணியில் சேர்ந்தவர்களுக்கு 10  ஆண்டுகளுக்கு பிறகு தகுதியின் அடிப்படையில் பணி நிரந்தரம்  செய்ய பொதுப்பணித்துறை தலைமை நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், இப்பணியில் இருந்த பலரும் மாற்றுப்பணிக்கு சென்று விட்டனர். கடந்த 2000ம் ஆண்டுக்கு பிறகு பாசன உதவியாளர் பணிக்கு ஆட்களை நியமிக்கவும் போதிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், தமிழகம்  முழுவதும் 4 ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளன.  தற்போது ஒரு மாவட்டத்திற்கு இரண்டு முதல் நான்கு பாசன உதவியாளர் வரை மட்டுமே  பணிபுரிந்து வருகின்றனர். இதன் காரணமாக, அந்தந்த மாவட்ட பகுதிகளில் உள்ள ஏரிகளை இவர்களால் முழுமையாக கண்காணிக்க முடியவில்லை.

இவை தவிர, தமிழகம் முழுவதும் 10 ஆயிரம் ஏரிகளும், கால்வாய்களும் ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் சிக்கியுள்ளது. மேலும், பாசன உதவியாளர்  இல்லாததால் அவசர காலகட்டங்களில் அணை, ஏரிகள் தண்ணீரை திறந்து விட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, மழை காலங்களில் ஏரிகள்,  கால்வாய்களில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் குடியிருப்பு பகுதிக்குள் வெளியேறுவதால் பொதுமக்கள் பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகின்றனர். இதுகுறித்து  பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறும் போது,  ‘பொதுப்பணித்துறையில் அணை, ஏரிகளை பராமரித்து, பாதுகாப்பதற்காக பாசன  உதவியாளர்கள் பணியமர்த்தப்பட்டனர். இவர்களது பிரதான பணியே அணை, ஏரி, கால்வாய் பகுதிகளில் புதிதாக ஆக்கிரமிப்பு முளைத்தால் உடனடியாக  உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்து நடவடிக்கை எடுப்பார்கள். இவர்களால் ஏரி பகுதிகளில் ஆக்கிரமிப்பு என்பது முற்றிலுமாக தடுக்கப்பட்டது.  ஆனால், தற்போது தமிழகம் முழுவதும் 300 பாசன உதவியாளர் மட்டுமே பணியில் உள்ளனர். இதன் காரணமாக ஏரி பகுதிகளில் கண்காணிப்பு பணி  முற்றிலுமாக முடங்கி உள்ளது. இப்பிரச்னையில் அரசு தலையிட்டு புதிதாக பாசன உதவியாளர் நியமனம் செய்து அணை, ஏரி, கால்வாயை பாதுகாக்க  உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • muharamfest

  நாடு முழுவதும் இஸ்லாமியர்களின் மொஹரம் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது

 • nasaevanaktrump

  அமெரிக்காவில் உள்ள நாசாவின் ஜான்சன் விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட்ட இவாங்கா டிரம்ப்

 • florence&trumph

  பிளோரென்ஸ் புயலால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப்

 • greenlandicemelt

  கிரீன்லாந்தில் வெப்பமயமாதலால் உருகும் பனிப்பாறைகள் : கடல் நீர்மட்டம் உயரும் அபாயம்

 • thirupathilast

  திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ திருவிழா : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்