SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

ஜெயலலிதா ஓய்வெடுத்த சிறுதாவூர் பங்களாவுக்கு போலீஸ் பாதுகாப்பு திடீர் வாபஸ்

2018-04-16@ 00:27:01

சென்னை: ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது ஓய்வெடுக்கும் சிறுதாவூர் பங்களாவுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு இருந்தது. அவர் இறந்த  பிறகும் ேபாலீஸ் பாதுகாப்பு தொடர்ந்தது. இந்நிலையில் கடந்த சில வாரத்துக்கு முன்னர் அந்த பாதுகாப்பும் முற்றிலும் விலக்கிக் கொள்ளப்பட்டது. பழைய மாமல்லபுரம் சாலையில் திருப்போரூர் அருகே சிறுதாவூரில் ஜெயலலிதா மற்றும் சசிகலாவுக்கு சொந்தமான பங்களா உள்ளது. சொத்துக்குவிப்பு  வழக்கில் சேர்க்கப்பட்ட இந்த பங்களா முன்பு டி.எஸ்.பி., இன்ஸ்பெக்டர் உள்பட 150 போலீசார் 9 பாயின்ட்டுகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.  ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு படிப்படியாக போலீஸ் பாதுகாப்பு குறைக்கப்பட்டது. ஆயுதப்படை மற்றும் சிறப்பு படை பிரிவு போலீசார் மட்டும்  பாதுகாப்பு பணியில் சுழற்சி முறையில் ஈடுபட்டிருந்தனர்.

இவர்கள் அனைவரும் ஆலத்தூர் சாரணர் பயிற்சி முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இதனிடையே சசிகலா குடும்பத்திற்கும் எடப்பாடி அரசுக்கும்  மோதல் முற்றிய நிலையில் அவர்களுக்கு எதிரான செயல்பாடுகளில் எடப்பாடி அரசு ஈடுபட்டு வந்தது. ஆனாலும் சிறுதாவூர், கொடநாடு உள்ளிட்ட  இடங்களில் போலீஸ் பாதுகாப்பு தொடர்ந்தது. அரசுடனான மோதல் போக்கு தொடர்ந்ததால் சிறுதாவூரில் தனியார் செக்யூரிட்டிகள் பாதுகாப்பு பணியில்  ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் ராணுவ கண்காட்சி நடைபெற்றதையொட்டி காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு பணிகளில் ஈடுபட்டிருந்த அனைத்து  போலீசாரும் வாபஸ் பெறப்பட்டு கண்காட்சிக்கு அனுப்பப்பட்டனர். இதில் சிறுதாவூர் பங்களா பாதுகாப்பு போலீசாரும் அடங்குவர்.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சிறுதாவூர் பங்களா பாதுகாப்பை விலக்கிக் கொள்ள தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி ஆலத்தூர் சாரணர்  பயிற்சி முகாமில் தங்கியுள்ள போலீசாரை அவர்களின் மாவட்ட முகாமிற்கு செல்ல உத்தரவு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.கடந்த 1 வாரமாக  சிறுதாவூர் பங்களாவில் போலீஸ் பாதுகாப்பு எதுவும் இல்லை. பிரதான நுழைவாயிலில் தனியார் செக்யூரிட்டிகளே பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.


மேலும் செய்திகள்

மருத்துவம்

Medical Trends கைகளின் வலி
Like Us on Facebook Dinkaran Daily News
  • autumnfestivalchina

    சீனாவில் இலையுதிர் காலம் நிறைவு விழாவையடுத்து வண்ண விளக்குகளால் ஜொலித்த நகரங்கள்

  • drumpsusma

    நியூயார்க் ஐ.நா. தலைமையகத்தில் 73வது பொதுக்குழு கூட்டம் : உலக நாடுகளின் தலைவர்கள் பங்கேற்பு

  • rahulgandhiamedi

    உத்தரபிரதேசத்தில் 2வது நாளாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சுற்றுப்பயணம்

  • usstromattack

    ஃபுலோரன்ஸ் புயல் தாக்கத்திற்கு பிறகு இயல்பு நிலைக்கு திரும்பி வரும் அமெரிக்கா

  • pandathirtysix

    36வது பிறந்த நாளை கொண்டாடிய உலகின் வயதான பாண்டா கரடி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்