SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நிலுவை தொகை வழங்கக்கோரி மே 8ம் தேதி கோட்டை முற்றுகை: ஜாக்டோ-ஜியோ அறிவிப்பு

2018-04-16@ 00:22:51

சென்னை: நிலுவைத் தொகை வழங்க கோரி மே 8ம் தேதி சென்னை கோட்டையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவது என்றும், பிளஸ் 2 மற்றும்  பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியில் பங்கேற்பது என்று மாநில ஒருங்கிணைப்பு கூட்டத்தில் ஜாக்டோ-ஜியோ தீர்மானம்  நிறைவேற்றியுள்ளது. ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பு குழு கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்  வருமாறு: அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் நிலுவைத் தொகை தொடர்பான கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி மே 8ம் தேதி சென்னையில்  கோட்டை முற்றுகை போராட்டம் நடத்துவது.

இம்மாதம் 23ம் தேதி முதல் 27ம் தேதி வரை 11 மண்டலங்களில் ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் தலைமையில் வேன் பிரசாரம்  மேற்கொள்வது. 18ம் தேதி முதல் மண்டல வாரியாக ஆலோசனை கூட்டம் நடத்துவது.மே மாதம் 3ம் தேதி அனைத்து ஒருங்கிணைப்பாளர்களும் சென்னையில் கூடி தீவிர பிரசாரம் செய்வது. ஜாக்டோ-ஜியோ போராட்டங்கள் மாணவர்  நலனுக்கு எதிரானது அல்ல. எனவே மாணவர்கள் நலன் கருதி பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடுவது  என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • france_park_machine

    பிரான்ஸ் நாட்டில் ஹாலிவுட் படக்காட்சிகளை போல் வடிவமைக்கப்பட்ட எந்திர பூங்கா!

  • madurai_meenut11

    மதுரை மீனாட்சி அம்மன் சித்திரை திருவிழா: மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடையுடன் விதி உலா

  • berlin_bomb_war

    இரண்டாம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட சக்திவாய்ந்த வெடிகுண்டு, பெர்லின் நகரில் கண்டுபிடிப்பு!

  • 10schooldata

    10ம் வகுப்பு பொதுதேர்வு நிறைவு எதிரொலி : மாணவர்கள் கலர் தூவி பிரியா நட்பை வெளிப்படுத்தி மகிழ்ந்தனர்

  • governor_palace11

    பெண்களை இழிவுப்படுத்தும் ஹெச்.ராஜா, எஸ்.வி. சேகரை கண்டித்து ஆளுநர் மாளிகை முற்றுகையிட்டு போராட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்