SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தமிழக நெடுஞ்சாலைத்துறையில் பொறியாளர்களுக்கு 10 ஆண்டு சீனியாரிட்டி இருந்தால் மட்டுமே பதவி உயர்வு கிடைக்கும்

2018-04-16@ 00:17:32

* விதியில் திருத்தம் * சங்கத்தினர் போராட்டம் நடத்த முடிவு

சென்னை: நெடுஞ்சாலைத்துறையில் இளநிலை பொறியாளர்கள் 10 ஆண்டு பணி அனுபவம் இருந்தால் மட்டுமே பதவி உயர்வு வழங்க வேண்டும்  என்று விதியில் திருத்தம் செய்து அரசிதழில் வெளியிட்டிருப்பது இளநிலை பொறியாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் நெடுஞ்சாலைத்துறையில் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு, தேசிய நெடுஞ்சாலை அலகு, நபார்டு மற்றும் கிராம சாலைகள், திட்டங்கள்,  சென்னை பெருநகர திட்டம் என 8 பிரிவுகள் உள்ளது. இதில், இளநிலை பொறியாளர், உதவி பொறியாளர், உதவி கோட்ட  பொறியாளர், கண்காணிப்பு  பொறியாளர், தலைமை பொறியாளர் என 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். இதில், இளநிலை, உதவி பொறியாளர்கள் 5  ஆண்டுகள் பணி அனுபவம் இருந்தால் உதவி கோட்ட பொறியாளராக பதவி உயர்வு வழங்கப்பட்டு வந்தது. குறிப்பாக, 3:1 என்ற அடிப்படையில் உதவி  பொறியாளர், இளநிலை பொறியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டது. இதன் மூலம் காலி பணியிடங்கள் அடிப்படையில் 3 உதவி பொறியாளர், 1  இளநிலை பொறியாளர் பணி மூப்பு அடிப்படையில் உதவி கோட்ட பொறியாளராக பதவி உயர்வு பெற்று வந்தனர். இந்த நிலையில் தற்போது உதவி  பொறியாளருக்கு 5 வருடம், இளநிலை பொறியாளர் 10 வருடம் பணிபுரிந்தால் மட்டுமே உதவி கோட்ட பொறியாளராக பதவி பெற முடியும் என்று விதி  திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

இது கடந்த ஏப்ரல் 4ம் தேதி அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம், இனி வருங்காலங்களில் இளநிலை  பொறியாளர்கள் பதவி உயர்வு பெற 10 ஆண்டுகள் கட்டாயம் பணியாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த விதி திருத்தம் இளநிலை  பொறியாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்த விதி திருத்தத்திற்கு எதிராக ேபாராட்டம் நடத்தவும் முடிவு செய்திருப்பதாக  கூறப்படுகிறது. இது குறித்து பெயர் வெளியிட விரும்பாத இளநிலை பொறியாளர்கள் கூறும் போது, டிப்ளமோ சிவில் படித்து முடித்து தான் இளநிலை பொறியாளர்கள்  பணியாற்றி வருகிறோம். எங்களுக்கும், பிஇ முடித்தவர்களுக்கும் உதவி பொறியாளர்களுக்கு எங்களது பணியை தான் செய்து வருகின்றனர்.  அப்படியிருக்கையில், எங்களுக்கு மட்டும் பதவி உயர்வு பெற 10 ஆண்டுகள் பணியாற்ற வேண்டும் என்று விதிதிருத்தம் செய்திருப்பது எந்த வகையில்  நியாயம் என்று தெரியவில்லை. இதன் மூலம் இளநிலை பொறியாளர்கள் பதவி உயர்வு பறிக்கப்பட்டுள்ளது. இந்த விதித்திருத்தத்திற்கு எதிராக  போராட்டம் நடத்த முடிவு செய்துள்ேளாம். பல்வேறு துறையில் பணியாற்றும் இளநிலை பொறியாளர்களை ஒன்று திரட்டி இந்த போராட்டத்தில்  ஈடுபடுவோம்’  என்றனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • iraqbikersride

    ஈராக்கில் சகோதரத்துவத்தை வலியுறுத்தி இருசக்கர வாகன ஓட்டிகள் நாடு முழுவதும் சுற்றுப்பயணம்

  • niagarafallssnow

    கனடாவில் பனிபொழிவால் உறைபனியாக காட்சியளிக்கும் நயாகரா நீர்வீழ்ச்சி

  • SiddhagangaSivakumarasamy

    பெங்களூரு சித்தகங்கா மடாதிபதி சிவகுமாரசாமியின் உடல் நல்லடக்கம் : அமைச்சர்கள் பங்கேற்பு

  • govindpmawards

    பிரதமரின் தேசிய பாலர் விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

  • 23-01-2019

    23-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்