SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

சிந்துவை வீழ்த்தினார் சாய்னா

2018-04-16@ 00:04:50

ஆவலுடன்  எதிர்பார்க்கப்பட்ட பேட்மின்டன் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப்  போட்டியில் நேற்று பி.வி.சிந்து, சாய்னா நெஹ்வால் மோதினர். ரியோ  ஒலிம்பிக்சில் வெள்ளி வென்றதைத் தொடர்ந்து சிந்து, அடுத்தடுத்த தொடர்களில்  வெற்றி பெற்று ரேங்கிங் பட்டியலிலும் முன்னேறி வருகிறார். முன்னாள்  நம்பர்-1 வீராங்கனையான சாய்னா, காயம் உள்ளிட்ட காரணங்களால் சற்று  தடுமாற்றம் கண்டு வருகிறார். இவ்விரு வீராங்கனைகள் நேருக்கு நேர் மோதும்  போட்டிகள் மிக மிக குறைவு என்பதால், இந்த ஆட்டம் பெரும் எதிர்பார்ப்பை  ஏற்படுத்தியது. இதில் ஆக்ரோஷமாக ஆடிய சாய்னா 21-18, 23-21 என்ற நேர்  செட்களில் சிந்துவை வீழ்த்தி தங்கம் வென்றார். காமன்வெல்த் விளையாட்டு  மகளிர் ஒற்றையர் பிரிவில் சாய்னா வெல்லும் 2வது தங்கம் இது. இதற்கு முன்,  2010ல் தங்கம் வென்றுள்ளார். வெள்ளியுடன் ஆறுதலடைந்த சிந்து, 2014ல்  வெண்கலம் வென்றுள்ளார். கடைசி நாளில் தங்கம் வென்ற சாய்னாவுக்கு  வாழ்த்துக்கள் குவிகின்றன.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • muharamfest

    நாடு முழுவதும் இஸ்லாமியர்களின் மொஹரம் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது

  • nasaevanaktrump

    அமெரிக்காவில் உள்ள நாசாவின் ஜான்சன் விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட்ட இவாங்கா டிரம்ப்

  • florence&trumph

    பிளோரென்ஸ் புயலால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப்

  • greenlandicemelt

    கிரீன்லாந்தில் வெப்பமயமாதலால் உருகும் பனிப்பாறைகள் : கடல் நீர்மட்டம் உயரும் அபாயம்

  • thirupathilast

    திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ திருவிழா : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்