IPL T20 லீக் போட்டி : சென்னை சூப்பர் கிங்ஸை 4 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது பஞ்சாப்

2018-04-15@ 23:44:08

சண்டிகர்: ஐபிஎல் டி20 தொடரில் கிறிஸ் கேல் அதிரடியாக ஆடி அரைசதம் அடிக்க கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 4 ரன் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்சை வீழ்த்தியது.சண்டிகரில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் டோனி பீல்டிங் தேர்வு செய்தார். பஞ்சாப் அணியில் கடந்த 2 போட்டியில் விளையாடாத கிறிஸ்கேல் இம்முறை லோகேஷ் ராகுலுடன் இணைந்து ஆட்டத்தை தொடங்கினார். இந்த ஜோடி தாறுமாறாக ரன் சேர்த்தது. டோனி தொடக்கத்திலேயே சுழல் பந்துவீச்சை களமிறக்க, கேல் சிக்சர்களை பறக்கவிட்டார். 22 பந்தில் அவர் அரைசதம் விளாச, பஞ்சாப்பின் ஸ்கோர் எகிறியது. 8 ஓவரில் 96 ரன் சேர்க்கப்பட்ட நிலையில் லோகேஷ் (37 ரன், 22 பந்து) விக்கெட்டை ஹர்பஜன் வீழ்த்தினார்.
ஆனாலும் அடுத்து வந்த அகர்வாலும் சிஎஸ்கே பந்துவீச்சை விளாச ரன் வேகம் குறையவில்லை. 10 ஓவரில் பஞ்சாப் அணி 115 ரன் குவித்தது. கேல் 63 ரன் (33 பந்து, 4 சிக்சர், 7 பவுண்டரி) எடுத்த நிலையில் வாட்சன் பந்தில் ஆட்டமிழக்க பஞ்சாப்பின் ரன் வேகம் குறைந்தது. இம்ரான் தஹிர் 15வது ஓவரில் அகர்வால் (30), பிஞ்ச் (0) விக்கெட்டை அடுத்தடுத்த பந்துகளில் வெளியேற்றினார். யுவராஜ் தன் பங்குக்கு 20 ரன் சேர்த்தார். கடைசி கட்டத்தில் கே.கே.நாயர் (29), கேப்டன் அஷ்வின் (14) ஓரளவுக்கு கைகொடுக்க பஞ்சாப் அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 197 ரன் சேர்த்தது. அடுத்து களமிறங்கிய சென்னை அணியில் வாட்சன் 11 ரன், முரளிவிஜய் 12 ரன், ராயுடு 49 ரன்னில் ஆட்டமிழந்தனர். டோனி 44 பந்தில் 79 ரன் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியில் சிஎஸ்கே 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 193 ரன் எடுத்து 4 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
மேலும் செய்திகள்
சில்லி பாயின்ட்...
பெடரேஷன் கோப்பை டென்னிஸ் : அரை இறுதி இன்று ஆரம்பம்
மான்டி கார்லோ மாஸ்டர்ஸ் அரை இறுதியில் நடால்
காமன்வெல்த் போட்டியில் கலக்கிய மனிகா பத்ராவுக்கு அர்ஜுனா விருது : டிடி கூட்டமைப்பு பரிந்துரை
காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற சதீஷ் உலக வரைபடத்தில் வேலூரை தேட வைத்து பெருமை சேர்த்துள்ளார் : அமைச்சர் கே.சி.வீரமணி பாராட்டு
கோடைக்கால இலவச கைப்பந்து பயிற்சி
உலகிலேயே முதல்முறையாக கடலுக்கு அடியில் சொகுசுவிடுதி... மாலத்தீவில் நவம்பர் மாதம் திறப்பு!
போதை பொருளான கஞ்சாவை, சட்டபூர்வமாக உபயோகிக்கும் 420 திருவிழா: உலகம் முழுவதும் கொண்டாட்டம்
சென்னையில் 24 மணி நேர பால் விற்பனை மையம் : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தொடங்கி வைத்தார்
21-04-2018 இன்றைய சிறப்பு படங்கள்
பிரான்ஸ் நாட்டில் ஹாலிவுட் படக்காட்சிகளை போல் வடிவமைக்கப்பட்ட எந்திர பூங்கா!
LatestNews
மதுரை காமராஜர் பல்கலை.யில் அதிகாரி சந்தானம் விசாரணை
15:16
விருதுநகர் அருகே தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்து: 3 பேர் பலி
15:13
ராமநாதபுரம் அருகே விரைவில் பயணிகள் விமான தளம்: அமைச்சர் மணிகண்டன்
15:07
கோவையில் பெண்ணை கீழே தள்ளி 10 சவரன் நகை பறிப்பு
14:57
நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்தியமைச்சர் அஸ்வினி குமார்
14:57
திருவொற்றியூர் அருகே மண்ணில் சி்க்கி ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு
14:46