SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற இந்திய வீராங்கனை மீது கல்வீசி தாக்குதல்

2018-04-15@ 19:55:00

வாரணாசி: காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற இந்திய வீராங்கனை மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் 21-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் நடந்தது. இதில் பளுதூக்குதலில் 122 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்ற இந்திய வீராங்கனை பூனம் யாதவ் தங்கம் வென்றார். இவர் தனது சொந்த ஊரான உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள ரொஹானியா என்ற இடத்தில் வசிக்கும் தனது உறவினர் வீட்டிற்கு நேற்று சென்றார்.

பூனம் யாதவின் உறவினருக்கும் பக்கத்து வீட்டாருக்கும் இடையே நிலப் பிரச்சனையில் தகராறு ஏற்பட்டது.  அந்தப் பிரச்சனையை சமாதனப்படுத்த முயன்ற பூனம் யாதவ் மீது சிலர் திடீரென கற்களை வீசி தாக்கியதில் அவர் காயமடைந்தார். இதையடுத்து பூனம் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். அவர்கள் பூனம் யாதவை மீட்டு வீட்டிற்கு அனப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • modi_bahvan_bang

    வங்காளதேசம் பவன் ஆய்வகத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!

  • proteststerliteissue

    சென்னையில் தமிழ்நாடு கலை இலக்கிய ஊடக செயற்பாட்டார்கள் கூட்டமைப்பு போராட்டம்

  • LibyaCarbombAttack

    லிபியாவின் பெங்காஸி நகரில் கார் குண்டு தாக்குதல்: 7 பேர் பரிதாபமாக உயிரிழப்பு

  • Libyacarbomb7

    லிபியாவில் நடத்தப்பட்ட கார் குண்டு தாக்குதலில் 7 பேர் உயிரிழப்பு

  • 26-05-2018

    26-05-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்