SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சஞ்சு சாம்சன் அதிரடி....19 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணியை வீழ்த்தி ராஜஸ்தான் அசத்தல் வெற்றி

2018-04-15@ 19:30:13

பெங்களூரு: பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை 19 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தல் வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் கோஹ்லி பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி துவக்கம் முதலே அதிரடியாக ஆடியது. கேப்டன் ரகானே 36 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். இதன் பின்னர் வந்த பென் ஸ்டோக்ஸ் அதிரடியாக ஆடி 27 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

ஒரு முனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் நிலைத்து நின்று அதிரடியாக ஆடிய சஞ்சு சாம்சன் பெங்களூரு அணியின் பந்துவீச்சாளர்களை பதம் பார்த்தார். மறுமுனையில் திரிபாதியும் தன் பங்கிற்கு விளாச ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. இறுதியில் 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 217 ரன்களை குவித்தது. அதிரடியாக விளையாடிய துவக்க வீரர் சஞ்சு சாம்சன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 92 ரன்களை விளாசினார். இதில் 10 சிக்ஸ்; 2 பவுண்டரிகளும் அடங்கும்.  கடைசி 5 ஓவர்களில் ராஜஸ்தான் அணி 88 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து 218 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு அணி துவக்கம் முதலே அதிரடியாக ஆட முற்பட்டு சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை பறிகொடுத்தது. துவக்க வீரர் மெக்கல்லம் 4 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். இதன்பின்னர் வந்த கேப்டன் கோஹ்லி, டி காக்குடன் ஜோடி சேர்ந்து அதிரடியில் இறங்கினார். இருவரும் 2-வைத்து விக்கெட்டுக்கு 77 ரன்கள் குவித்தனர். 26 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டி காக் ஆட்டமிழந்தார்.

இதனையடுத்து வந்த ராஜஸ்தான் சுழற்பந்துவீச்சாளர் ஸ்ரேயாஸ் கோபால் அசத்தலாக பந்துவீசி கோஹ்லி, டி வில்லியர்ஸ் விக்கெட்டுகளை வீழ்த்தினார். பின்னர் வந்த தமிழகத்தை சேர்ந்த வாஷிங்டன் சுந்தர் அதிரடியாக ஆடி 35 ரன் குவித்தார். இறுதியில் பெங்களூரு அணியால் 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 198 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. இதன் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. அதிரடியாக விளையாடிய ராஜஸ்தான் அணியின் சஞ்சு சாம்சன் ஆட்டநாயகன் விருதை தட்டி சென்றார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-07-2018

    21-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • DryingClothingfestival

    சீனாவில் வருடாந்திர உலர்த்தும் ஆடை திருவிழா: பாரம்பரிய ஆடைகளை நெய்து விழாவை சிறப்பித்த பெண்கள்

  • unmanedbookshopchina

    சீனாவின் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மிகப்பெரிய ஆளில்லா புத்தக நிலையம் திறப்பு

  • newyork_steam_explosion

    நீராவி குழாய் வெடித்து சிதறியதில் புகை மண்டலமாக காட்சியளித்த நியூயார்க் நகரம்!

  • Apollo11NeilArmstrong

    நீல் ஆம்ஸ்ட்ராங் சந்திரனின் மேற்பரப்பில் கால்பதித்த தினம் இன்று: அரிய புகைப்படங்களின் தொகுப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்