SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வருகிறது மாருதி வேகன் ஆர் 7 சீட்டர்

2018-04-15@ 00:45:08

இந்தியாவில் மாருதி வேகன் ஆர் காருக்கு வாடிக்கையாளர் மத்தியில் அமோக வரவேற்பு இருக்கிறது. நகர்ப்புற பயன்பாட்டிற்கு ஏற்ற கச்சிதமான மாடலாக வலம் வருகிறது. இந்நிலையில், மாருதி வேகன் ஆர் காரின் 7 சீட்டர் மாடலை 2012 ஆட்டோ எக்ஸ்போவில் சுஸுகி நிறுவனம் காட்சிக்கு வைத்திருந்தது. இந்த மாடலில் 3 வரிசை இருக்கை அமைப்புடன் 7 பேர் செல்வதற்கான இருக்கை வசதியை பெற்றிருந்தது. சில ஆண்டுகளுக்கு முன் இந்தோனேஷிய ஆட்டோ எக்ஸ்போவிலும் காட்சிக்கு வைக்கப்பட்டது. தற்போது இந்த மாடல் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டுவரப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த சில மாதங்களாக சுஸுகி சோலியோ என்ற பெயரில் ஜப்பானில் விற்பனையில் இருக்கும் 7 சீட்டர் மாருதி வேகன் ஆர் கார் சோதனை ஓட்டம் தற்போது இந்திய மண்ணில் நடத்தப்பட்டு வருகிறது. வரும் பண்டிகை காலத்தில் இந்த புதிய 7 சீட்டர் மாருதி வேகன் ஆர் கார் இந்தியாவில் விற்பனைக்கு களமிறக்கப்பட உள்ளது. மாருதி வேகன் ஆர் காரின் அடிப்படையிலான இந்த 7 சீட்டர் மாடல், 4 மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்டது.

எனவே, இந்த 7 சீட்டர் காரை மிக சவாலான விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய வாய்ப்பு இருக்கிறது. மாருதி நிறுவனத்தின் நம்பகமான மாடலாக கருதப்படும் வேகன் ஆர் பிராண்டில் இந்த கார் விற்பனைக்கு வரும்போது நிச்சயம் அதிக வரவேற்பை பெறும் வாய்ப்பு இருக்கிறது. ஜப்பானில் விற்பனை செய்யப்படும் சுஸுகி சோலியோ காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜினுடன் ஹைப்ரிட் வெர்ஷனில் விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில், இந்தியாவில் சுஸுகி ஸ்விப்ட் காரில் பயன்படுத்தப்படும் 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜினுடன் இந்த கார் விற்பனைக்கு வர வாய்ப்புள்ளது. இப்புதிய மாடல் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் வெளிவருகிறது. மாருதி நிறுவனத்தின் பட்ஜெட் விலை காராக இருக்கும் என்பதால் இப்போதே எதிர்பார்ப்பை கிளறியிருக்கிறது. விலை விவரம் வெளிப்படையாக அறிவிக்கப்படவில்லை.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • DryingClothingfestival

    சீனாவில் வருடாந்திர உலர்த்தும் ஆடை திருவிழா: பாரம்பரிய ஆடைகளை நெய்து விழாவை சிறப்பித்த பெண்கள்

  • unmanedbookshopchina

    சீனாவின் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மிகப்பெரிய ஆளில்லா புத்தக நிலையம் திறப்பு

  • newyork_steam_explosion

    நீராவி குழாய் வெடித்து சிதறியதில் புகை மண்டலமாக காட்சியளித்த நியூயார்க் நகரம்!

  • Apollo11NeilArmstrong

    நீல் ஆம்ஸ்ட்ராங் சந்திரனின் மேற்பரப்பில் கால்பதித்த தினம் இன்று: அரிய புகைப்படங்களின் தொகுப்பு

  • smallrobochina

    சீனாவில் அத்தியாவசிய பொருட்களை வீடுகளுக்கு சென்று வழங்கும் சிறிய ரோபா வடிவமைப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்