SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

கார் சூடாகிறதா? கவனம்...!

2018-04-15@ 00:44:29

1 காரின் இன்ஜினை சூடாக்குவது என்பது அதன்  வாழ்நாளுக்கு நாம் வைக்கும் வேட்டு. கார் இன்ஜின் சூடாகிறது என்ற அறிகுறி காண்பித்தால் அதை உடனடியாக என்னவென்று பார்ப்பது நல்லது. கார்  அதிமாக சூடானால் கார் இன்ஜினில் இருந்து புகை கிளம்பி கார் உங்களை  நடுரோட்டிலேயே நிறுத்திவிடும். பெரும் செலவையும் ஏற்படுத்திவிடும்.
2சந்தர்ப்ப சூழ்நிலையில் கார் சூடாகி புகைவந்தால் உடனடியாக காரை பாதுகாப்பான  பகுதியில் ஓரங்கட்டி விடுவது நல்லது. இது, மற்றவர்களுக்கு இடையூறு இல்லாமல்  இருக்கும். காரை நிறுத்தியவுடன் காரின் பேனட்டை திறக்க  முயற்சிக்காதீர்கள். காரின் பேனட் சூடாக இருக்கும். அந்த சூடு குறைந்த  பின்பு காரின் பேனட்டை திறக்கலாம்.
3 காரின் பேனட்டை திறந்த  பின்பு ரேடியேட்டர் மற்றும் ரிசர்வர் டேங்கன் கூலண்ட் அளவை பாருங்கள்.  கூலண்ட் அளவை பார்க்க உங்கள் கார் மேனுவலில் குறிப்பிடப்பட்டிருக்கும்.  ரேடியேட்டரை கவனமாக திறந்து, எவ்வளவு சூடு இருக்கிறது என்பதை பாருங்கள். காரை  நிறுத்தியதும் ரேடியேட்டர் கேப்பை திறக்காதீர்கள். அதில் இருந்து அதிக  சூடாக புகை வெளிவரும். முகத்தை சிதைத்துவிடும். ரேடியேட்டர் கேப்பை திறக்கும்போது, விலகிநின்று, ஏதேனும் துணியை  பயன்படுத்துவது சிறந்தது.

4 ரேடியேட்டரில் மேல்பக்கம் மற்றும்  கீழ்பக்கம் இருக்கும் குழாய்களை பாருங்கள். அதில் ஏதேனும் ஒரு இடத்தில்  சரியான அடைப்பு இல்லாமல் இருந்தாலோ, கழண்டு இருந்தாலோ, அதில் சேதம்  இருந்தாலோ கார் சூடாகலாம். ரேடியேட்டர் பேன் வேலை செய்கிறதா என்பதை காரை  ஸ்டார்ட் செய்து பாருங்கள். இதுதான் பெரும்பாலானோருக்கு பிரச்னையாக  இருக்கும்.
5 கூலண்டாக ஊற்றப்படும் ஆயில் இல்லாமல் இருந்தால் அல்லது குறைவாக இருந்தால் பிரச்னையை ஏற்படுத்தும். சரியாக சர்வீஸ் நேரத்தில், சர்வீஸ் செய்யாத கார்கள். ரேடியோட்டரில் உள்ள ஏதேனும் ஒரு  குழாயில் உள்ள லீக் அல்லது சேதம், வாட்டர் பம்ப், ஹீட்டர் கோர், ஹீட்  கேஸ்கட், ப்ரீஸ் பிளக், ஆட்டோமெட்டிங் கியர் ஆயில் கூலர், சிலிண்டர் ஹெட்  ஆகிய இடங்களில் லீக் ஏற்பட்டாலும் இந்த கூலண்ட் ஆயில் லீக் ஆக  வாய்ப்பு உள்ளது. முறையான கால இடைவெளியில் காரை சர்வீஸ் செய்தாலே இப்பிரச்னையை  தவிர்க்கலாம்.
6ஹீட் ஆகி கார் ரோட்டில் நிற்கும் நேரத்தில், ரேடியேட்டரில் தண்ணீர்  ஊற்றி சமாளிக்கலாம். ஆனால், அது தற்காலிகம்தான்.

7ரேடியேட்டர்  குழாய் கூலண்ட் சரியான அளவில் இருந்தால், ரேடியேட்டர் குழாயில் அடுத்த பிரச்னை இருக்கலாம். அதில் அடைப்பு, சரியான சுழற்சியின்மை ஆகிய  காரணங்களால் கார் ஹீட் ஆகலாம். இந்த பிரச்னைகளில் மெக்கானிக் கொண்டு  அடைப்பை சரிசெய்வதே சிறந்த தீர்வு.
8 காரில் உள்ள சூட்டை முழுவதும் வெளியே அனுப்புவது ரேடியேட்டர் பேன்தான் அது  வேலை செய்யவில்லை என்றால் காரில் சூடு வேகமாக ஏறிவிடும். காரின்  ரேடியேட்டர் பேன் வேலை செய்கிறதா என்பதை பார்க்க, காரின் ஏசியை ஆன் செய்தாலே  ரேடியேட்டர் பேன் சுத்தவேண்டும். இல்லாவிட்டால், உடனடியாக மெக்கானிக்கிடம்  காரை கொண்டுசெல்வது நல்லது. முடிந்தளவு குறைந்த வேகத்தில் செல்ல வேண்டும்.  
9தவறான கூலண்டை பயன்படுத்தும்  பட்சத்தில், ரேடியேட்டர் சரியான சூட்டை  வெளியேற்றும் வேலையை செய்யாது.

10 பொதுவாக  வாட்டர் பம்ப்களில் பிரச்னை ஏற்படுவதில்லை. காரை சுமார் 50,000  கி.மீ.,க்கு மேல் ஓட்டியிருந்தால் இந்த பிரச்னை ஏற்பட வாயப்புள்ளது.  வாட்டர் வால்வு சீல்களில் லீக் இருக்கிறதா என்பதையும் செக் செய்துகொள்வது நல்லது.  
11 தெர்மோஸ்டாட் என்பது கூலண்ட் ஆயில்  இருக்கும் இடம். இது சாதாரணமாக அடைத்த நிலையில் இருக்கும். காரின் இன்ஜின்  ஸ்டார்ட் ஆகி குறிப்பிட்ட அளவு சூடு ஏறிய பின்பு திறக்கும். பின்பு கூலண்ட்  ஆயில் செயல்பட்டு, சூட்டை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும். தெர்மோஸ்டாட்  திறக்காமல் இருந்தால் இன்ஜின் சூடு அதிகமாகும். பழுதான தெர்மோஸ்டார்டை  மாற்றுவது மட்டும்தான் இதற்கு ஒரே வழி.
12 காரின் சூட்டிற்கு எதுவும் காரணமாக இல்லாத பட்சத்தில், கடைசியான  வாய்ப்புதான் ஹெட் கேஸ்கட் பழுது. இன்ஜினுக்கும், சிலிண்டருக்கும் இடையே  கூலண்ட், இன்ஜின் ஆயில் ஆகியவை செல்வதை கட்டுப்படுத்தும் கருவி இது. இதில்,  கோளாறு ஏற்பட்டால் காரில் சூடு அதிகரிக்கும். புகைவெளியிடும் கருவி வழியாக  கூலண்ட் வெளியாகுதல், புகை வெளியிடும் கருவி வழியாக வெள்ளை புகை  வெளியாகுதல், இன்ஜின் ஆயில் நிலை மாறுதல் உள்ளிட்டவற்றை வைத்து இதை நாம்  அறிந்துகொள்ளலாம். 13 கார் சூடானால் அஜாக்கிரதையாக இருந்துவிடாதீர்கள் அதற்கான உண்மையான காரணத்தை கண்டறிந்து, சரியான  நடவடிக்கை எடுத்தால், உங்களை எதிர்நோக்கியிருக்கும் பெரும் செலவுகளில் இருந்து தப்பிக்கலாம்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-09-2018

    23-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 22-09-2018

    22-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • muharamfest

    நாடு முழுவதும் இஸ்லாமியர்களின் மொஹரம் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது

  • nasaevanaktrump

    அமெரிக்காவில் உள்ள நாசாவின் ஜான்சன் விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட்ட இவாங்கா டிரம்ப்

  • florence&trumph

    பிளோரென்ஸ் புயலால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்