SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தாரமங்கலம் கைலாசநாதர் கோயிலில் புதுப்பொலிவு பெறும் அற்புத சிற்பங்கள்

2018-04-12@ 10:07:25

சேலத்தில் ஆயிரமாண்டு பழமை வாய்ந்த தாரமங்கலம் கைலாசநாதர் கோயில் கும்பாபிஷேக விழா ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகிறது. இதையொட்டி, கோயிலின் அற்புத சிற்பங்கள் புதுப்ெபாலிவு பெற்று வருகிறது. ேசலம் மாவட்டம் தாரமங்கலத்தில் ஆயிரமாண்டு பழமை வாய்ந்த கைலாசநாதர் கோயில் உள்ளது. 17ம் நூற்றாண்டில் கெட்டிமுதலி மன்னர்களால் கட்டப்பட்ட இந்த கோயில், தமிழகத்தின் அற்புத சிற்பக்கலைக்கு ஒப்பற்ற சான்றாக விளங்குகிறது. இங்குள்ள நூற்றுக்கணக்கான சிற்பங்கள் கவனத்தை ஈர்த்து, இதயத்தை இழுக்கிறது. ஒவ்வொரு சிற்பமும் நுட்பத்தின் உச்சமாக திகழ்கிறது. 20 ஆண்டுகளுக்கு பிறகு, கோயில் கும்பாபிஷேக விழா, வரும் 22ம் தேதி நடக்கவுள்ளது. இதையடுத்து கோயிலும், சிற்பங்களும் புதுப்பொலிவு பெற்று வருகிறது.

இதுகுறித்து தொல்லியல் ஆர்வலர்கள் கூறியது: 90 அடி உயரத்தில் 5 அடுக்குகளை கொண்ட ராஜகோபுரம் கம்பீரமாக உள்ளது. கோயிலுக்குள் நுழைந்து வந்த வழியை திரும்பி பார்த்தால், ஒரு ெபரிய தேரை குதிரைகளும், யானைகளும் இழுத்து வருவது போன்ற காட்சியே முதலில் பிரமிப்பூட்டுகிறது. இதற்கடுத்து கோயில் சிவனின் பற்பல தோற்றங்களும், பிரம்மாவின் அவதாரங்களும் கல்லில் சிலையாக வடிக்கப்பட்டுள்ளது. ரதி, மன்மதன் சிலையும், ராமர் அம்புவிடும் காட்சியும் சிற்பக்கலையின் அதிசயம். ராமன் அம்புடன் பதுங்கியிருக்கும் இடத்திலிருந்து பார்த்தால், வாலியும், சுக்ரீவனும் இருப்பது தெளிவாகத் தெரிவர். ஆனால், வாலி இருக்குமிடத்திலிருந்து பார்த்தால், ராமர் பதுங்கியிருப்பது தெரியாது.

அதுபோலவே, ரதியை, மன்மதன் மறைந்திருந்து பார்க்கும் காட்சியும் அமைந்துள்ளது, அன்னப்பறவையின் மீது அமர்ந்திருக்கும் ரதி இருக்குமிடத்திலிருந்து மன்மதனை காணமுடியாது, ஆனால், கிளியின் மீது அமர்ந்திருக்கும் மன்மதன் பார்த்தால், ரதியை தெளிவாக காணும் வகையில் இந்த சிற்பங்களை அமைத்துள்ளார்கள். இதுதவிர இன்னும் பல வரலாற்று செய்திகளையும் இந்த கற்சுவர்களில் செதுக்கியுள்ளார்கள். மூலவருக்கு முன்புறம் உள்ள மண்டப மேற்க்கூறையில், ஏழு அடி நீளமும் அகலமும் கொண்ட ஒரே கல்லில், விரிந்த எட்டு தாமரை இதழ்கள் காணப்படுகிறது, ஒவ்வொரு தாமரை இதழின் மீதும் தன் வாளால் ஒட்டிப் பிடித்தபடி ஒரு கிளிகள்  தொங்கிக்கொண்டு தாமரை பூவின் நடு தண்டின் மீது போட்டிருக்கும் ஒரு கல் வளையத்தை தன் அலகால் பிடித்துக்கொண்டிருக்கும் வண்ணம் செதுக்கப்பட்டுள்ளது.

அந்த கல் வளையத்துக்கு கீழே இன்னொரு கல் வளையம் போட்டுள்ளனர், அந்த  இரண்டாவது கல் வளையத்தை நீளமான கம்பு இருந்தால் நாம் சுற்றிவிட்டுப்பார்க்க முடியும். இந்த தாமரை இதழை சுற்றிலும் எட்டு திசைகளிருந்தும் வரும் துவார பாலகர்கள் தங்களின் வாகனங்கள் மீது அமர்ந்திருக்கும் காட்சியும், அவர்களுக்கு அருகில் பணிப்பெண்கள் நிற்கும் காட்சியும் செதுக்கப்பட்டுள்ளது. இவற்றின் நடுவே எட்டு கற்சங்கிலிகள் தொங்கவிடப்பட்டுள்ளது. கற்பனைக்கும் எட்டாத இந்த காட்சியை பார்த்து பிரமிக்காதவர்கள் யாரும் இருக்கமுடியாது.

மேலும் மண்டபத்தின் பின்பக்கம் உள்ள தூண்களில் யாழி மற்றும் குதிரைகளில் பயணம் செய்யும் வீரர்களின் காட்சிகள் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது. இதில், முதல் யாழிகளின் வாயின் உள்ளே இருக்கும் கல் செதுக்கி எடுக்கப்பட்டு வெற்றிடம், வாயில் கல்பந்து உருண்டோடும் படி வடிவமைத்துள்ளதும் அற்புதம். இந்த சிற்பங்களும், ேகாயிலும் தற்போது நடக்கும் கும்பாபிஷேக ஏற்படுகளால் மெருகேறி வருகிறது. இதன்மூலம் சிற்பக்களஞ்சியமாக திகழும் கைலாசநாதர் ேகாயில், புதுப்ெபாலிவு ெபற்று கலை ஆர்வலர்கள், பக்தர்களின் கவனம் ஈர்க்கும்.இவ்வாறு தொல்லியல் ஆர்வலர்கள் கூறினர். 


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 16-12-2018

  16-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • lisbon_tramp11

  லிஸ்பனில் டிராம் ரயில் தடம் புரண்டு விபத்து : 28 பேர் காயம்

 • 15-12-2018

  15-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • AmazonIllegalMining

  அமேசான் மழைக்காடுகளில் தங்கம் எடுக்க சட்டவிரோதமாக தோண்டப்படும் சுரங்கங்கள்..: போலீசார் தீவிர சோதனை

 • chinasnowfall

  கடும் பனிப்பொழிவால் வெண் போர்வை போர்த்தியது போல காணப்படும் சீனாவின் கண்கவர் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்