நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடக்கப்பட்டதை கண்டித்து பிரதமர் நாளை உண்ணாவிரதம்
2018-04-11@ 01:00:52

புதுடெல்லி: சமீபத்தில் நிறைவடைந்த நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடக்கப்பட்டதை கண்டித்து பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் நாளை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுகிறார்.நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர், எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக கடந்த 6ம் தேதியுடன் நிறைவடைந்ததாக ஆளும் பாஜ குற்றம்சாட்டியுள்ளது. இந்த நிலையில் கடந்த 6ம் தேதி பாஜ எம்பிக்கள் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றியபோது, காங்கிரஸ் பிரிவினை அரசியலில் ஈடுபடுவதாக தெரிவித்தார். மேலும் இந்த கூட்டத்தொடரை செயல்படவிடாமல் தடுத்த எதிர்க்கட்சிகளை கண்டித்து வரும் 12ம் தேதி பாஜ உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் அவர் தெரிவித்திருந்தார். இதன்படி நாளை டெல்லியில் ஒரு நாள் உண்ணாவிரதத்தை பிரதமர் மோடி மேற்கொள்கிறார். அவருடன் பாஜ எம்பிக்களும் பங்ேகற்கின்றனர். அப்போது அவரது அன்றாட பணிகள் பாதிக்கப்படாத வகையில் பொதுமக்கள் மற்றும் அதிகாரிகளையும் பிரதமர் மோடி சந்தித்து பேசுவார். அலுவலக பைல்களையும் பார்ப்பார் என அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள கர்நாடகாவின் ஹுப்ளியில் பாஜ தலைவர் அமித்ஷா அதே நாளில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுகிறார். இது தவிர பாஜ எம்பிக்களும் தத்தமது தொகுதிகளில் உண்ணாவிரதம் இருப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. பாஜ உண்ணாவிரத போராட்டம் அறிவித்துள்ள நிலையில், ஏற்கனவே நேற்று முன்தினம் சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி காங்கிரசாரும் நாடு தழுவிய உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் செய்திகள்
ஜெப்ரானிக்ஸ் தனது முதல் சில்லறை விற்பனையகத்தை திறக்கிறது.
ஜீப் காம்பஸ் காரில் புதிய வேரியண்ட் அறிமுகம்
வந்தாச்சு அடுத்த ரேஸ் பைக் - யமஹா YZF R3
காதலர் தினத்தில் கால் பதிக்கும் ‘மஹிந்திரா எக்ஸ்யூவி 300’
அசத்தலான டாடா ஹாரியர் அறிமுகம்
பேரிடர் காலங்களில் மீட்பு பணியில் ஈடுபடும் கால்கள் கொண்ட 'கார்': ஹூண்டாய் நிறுவனம் தயாரிப்பு
17-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்
16-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்
ஒளியின் மாயாஜாலத்தை மக்களுக்கு காண்பிக்க கொண்டாடப்படும் பிரைட் பிரஸ்ஸல்ஸ் திருவிழா: பெல்ஜியத்தில் கோலாகலம்
பிரான்சில் நடைபெற்ற 86வது லெமன் திருவிழா : பழங்களை கொண்டு பிரம்மாண்ட சிற்பங்கள் வடிவமைப்பு
முழு அளவிலான டைட்டானிக் கப்பலை மீண்டும் கட்டமைத்து வரும் சீனா..: புகைப்பட தொகுப்பு