SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மலைகளில் மேய்ச்சலுக்கு அனுமதி மறுப்பால் வயல்களில் மேய்ச்சலுக்கு போகும் மாடுகள்

2018-04-09@ 12:48:39

தேனி: தேனி மாவட்டத்தில் வனத்தில் மலை மாடுகள் மேய்ச்சலுக்கு அனுமதி மறுக்கப்படுவதால், மாடுகளுக்கான தீவனங்களுக்காக வயல்வெளிகளில் மேய்ச்சலுக்கு விடும் அவலம் உள்ளது. தமிழகத்தில் வனப்பகுதி அதிகம் உள்ள மாவட்டமாக தேனி மாவட்டம் உள்ளது. மாவட்டத்தை சுற்றி மேற்குத் தொடர்ச்சி மலையான கொடைக்கானல், போடிமெட்டு, கம்பம்மெட்டு, குமுளி, மேகமலை, வருசநாடு உள்ளிட்ட மலைகள் உள்ளன. வனப்பகுதிகளில் காலம் காலமாய் விவசாயிகள் வளர்க்கும் மலைமாடுகளை மேய்ச்சலுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டு வந்தது. இதற்காக ஒவ்வொரு பசலி ஆண்டும் மலைமாடுகளை மேய்ச்சலுக்கு அனுமதிக்கும் உரிமம் வனத்துறை மூலம் வழங்கப்படும்.

ஆனால், சமீபகாலமாக மலைமாடுகளை வனப்பகுதியில் மேய்ச்சலுக்கு விட வனத்துறை மறுத்து வருகிறது. இதனால் விவசாயிகள் தாங்கள் வளர்த்து வரும் நாட்டின மலைமாடுகளை மேய்ச்சலுக்கு விடமுடியாமல் தவித்து வருகின்றனர். விவசாயிகள் வளர்த்து வரும் மலைமாடுகளை மேய்ச்சலுக்கு செல்ல அனுமதி மறுத்துள்ளதால், முல்லைப்பெரியாறு பாசன நிலத்தில் அறுவடை முடிந்த பகுதியில் எட்டிப்பார்க்கும் புல்களை மேய்ந்து கொள்ள விவசாயிகள் மலைமாடுகளை மேய்ச்சலுக்கு விடும் அவலம் ஏற்பட்டுள்ளது. வனப்பகுதியில் மலைமாடுகள் மேய்வதால் மாடுகளின் எச்சத்தின் மூலம் புதிய புற்கள் உருவாகி வனம் செழிக்கும் நிலை ஏற்படும் என்பதால், மாவட்ட நிர்வாகம் அனைத்து மலைமாடுகளுக்கும் மேய்ச்சல் அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை தீவிரமடைந்துள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 25-05-2020

    25-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 24-05-2020

    24-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 23-05-2020

    23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 23-05-2020

    23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 22-05-2020

    22-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்