வெளியில் இசை கேட்பதற்கேற்ற வயர்லெஸ் சிறிய ஸ்பீக்கர் ஆக்ஸல் ஜெப்ரானிக்ஸ் அறிமுகம்
2018-03-28@ 17:58:33

IT சாதனங்கள், ஆடியோ/ வீடியோ மற்றும் கண்காணிப்பு சாதனங்கள் முதலியவற்றை தயாரிக்கும் இந்தியாவின் முன்னணி பிராண்டான ஜெப்ரானிக்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் 'ஆக்ஸல்'என்ற புதிய சிறிய ஸ்பீக்கரை அறிமுகப்படுத்தி இருக்கிறது. அது ரெட்ரோ பூம்பாக்ஸ் போல தோற்றமளிக்கின்றது. இந்த சிறிய ஸ்பீக்கரின் உதவியால் நீங்கள் உங்களது மனம் கவர் பாடல்களை நீங்கள் விரும்பும் விதத்தில் கேட்கலாம்.
ஆக்ஸல் தனித்துவமான வடிவமைப்பைக் கொண்டிருக்கிறது. அது உங்களது ரெட்ரோ பூம்பாக்ஸிற்கு நல்ல வடிவமைப்பையும், ஸ்டைலையும் தருகிறது. இது கையடக்கமானது மற்றும் இலகுவானது, அதே நேரம் ஒலியும் ஆற்றல் மிகுந்ததாக இருக்கிறது. ஒலி கட்டுப்பாடு, மீடியா கட்டுப்பாடு, வானொலி மற்றும் ஈக்வலைசர் முதலியற்றுக்கு மேற்பகுதியில் கட்டுப்பாட்டு பொத்தான்கள் உள்ளன. இதில் நீங்கள் ப்ளூடூத் மூலம் இணைத்து உங்களது மொபைல் அழைப்புகளையும் கேட்டுக் கொள்ளலாம். இந்த வயர்லெஸ் சிறிய ப்ளூடூத் ஸ்பீக்கர் LED டிஸ்பிளேயுடன் வருகிறது. மேலும் இதில் இருக்கும் பல் இணைப்பு விருப்பத் தேர்வுகள் மூலம் நீங்கள் உங்களது இசையை ப்ளூடூத் மூலம் வயர்லெஸ்ஸில் ஸ்ட்ரீம் செய்து கொள்ளலாம் அல்லது உங்களது USB/ மைக்ரோ SD கார்டுகளைச் செருகியும் பயன்படுத்திக் கொள்ளலாம். இது AUX ஆதரவு அல்லது உள்ளமைக்கப்பட்ட FM வானொலி கேட்கும் வசதியும் கொண்டிருக்கிறது.
ஜெப்ரானிக்ஸின் இயக்குனர் திரு. பிரதீப் தோஷி இந்த புதிய அறிமுகம் குறித்து பேசுகையில், 'சிறந்த ஒலி மற்றும் அழகிய வடிவமைப்புடன் கூடிய மிகச்சிறிய அளவிலான ஸ்பீக்கர்களுக்கான தேவை அதிகரித்ததன் காரணமாக, நாங்கள் எங்களது புதிய சிறிய ஆக்ஸல் ஸ்பீக்கர்களை அறிமுகப்படுத்தி இருக்கிறோம். இலகுவான மற்றும் வெளியிடங்களில் எளிதாகப் பயன்படுத்த ஏதுவாக இருக்கும் இந்த ஸ்பீக்கர், அதன் வடிவமைப்பு மற்றும் உரத்த ஒலியில் ரெட்ரோ பூம்பாக்ஸ் போன்று செயல்படக்கூடியது.'என்றார். இந்த வயர்லெஸ் சிறிய ஸ்பீக்கர் சிவப்பு மற்றும் கருப்பு நிறத்தில் வருகிறது, இது இந்தியா முழுவதும் முன்னணி சில்லறை கடைகளில் கிடைக்கும்.
மேலும் செய்திகள்
ஜெப்ரானிக்ஸ் தனது முதல் சில்லறை விற்பனையகத்தை திறக்கிறது.
ஜீப் காம்பஸ் காரில் புதிய வேரியண்ட் அறிமுகம்
வந்தாச்சு அடுத்த ரேஸ் பைக் - யமஹா YZF R3
காதலர் தினத்தில் கால் பதிக்கும் ‘மஹிந்திரா எக்ஸ்யூவி 300’
அசத்தலான டாடா ஹாரியர் அறிமுகம்
பேரிடர் காலங்களில் மீட்பு பணியில் ஈடுபடும் கால்கள் கொண்ட 'கார்': ஹூண்டாய் நிறுவனம் தயாரிப்பு
17-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்
16-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்
ஒளியின் மாயாஜாலத்தை மக்களுக்கு காண்பிக்க கொண்டாடப்படும் பிரைட் பிரஸ்ஸல்ஸ் திருவிழா: பெல்ஜியத்தில் கோலாகலம்
பிரான்சில் நடைபெற்ற 86வது லெமன் திருவிழா : பழங்களை கொண்டு பிரம்மாண்ட சிற்பங்கள் வடிவமைப்பு
முழு அளவிலான டைட்டானிக் கப்பலை மீண்டும் கட்டமைத்து வரும் சீனா..: புகைப்பட தொகுப்பு