SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தெரிஞ்சுக்கலாம் வாங்க...!

2018-03-28@ 10:25:43

இரவு படுக்க செல்லும்முன் எலுமிச்சைப்பழத்தில் பாதியை முகத்தில் தடவிக்கொண்டு காலையில் குளிர்ந்தநீரில் முகம்கழுவினால் முகம் பளபளப்பாக அழகுடன் இருக்கும்.

எலுமிச்சம்பழத் தோலுடன் உப்பைச் சேர்த்து காயவைத்து பவுடராக்கி பல் விளக்க பல் பளிச்சென இருக்கும்.

புதினா கறிவேப்பிலை சட்னியை உணவில் சேர்த்தால் முடி கருகருவென வளரும்.

பிரிட்ஜில் எலுமிச்சை தோல் வைத்தால் மணக்கும்.

எறும்பை விரட்ட சிறிது கற்பூர வில்லையை பயன்படுத்தலாம்.

காய்கறிகளை நறுக்கிய பிறகு கழுவினால் சத்துக்கள் விரயமாகும். எனவே கழுவிய பிறகே அவற்றை நறுக்க வேண்டும்.

1998ல் முதன்முதலாக சைல்டுலைன் 1098இலவச தொலைபேசி சேவை தொடங்கப்பட்டது. 2006ல் முதன்முதலாக மத்தியஅரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் மூலம் உதவி பெறப்பட்டு தேசியஅளவிலான திட்டம் என்று அங்கீகரிக்கப்பட்டது.

இந்தியாவின் 255நகரங்களிலும், 30மாநிலங்களிலும் தமிழ்நாட்டில் 28இடங்களிலும் இச்சேவை செயல்பட்டு வருகிறது.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் சிறப்பு மேம்பாட்டு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன்படி கூடைப்பந்திற்கு கோயம்புத்தூரிலும், பளுதூக்குதல் வேலூரிலும், வளைகோல்பந்து திருநெல்வேலியிலும் சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு இந்த விளையாட்டிற்கென சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. மாணவர், மாணவரல்லாதோர் பயிற்சி பெறலாம். பயணப்படி உள்ளிட்ட நிதியுதவி வழ ங்கப்படும்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 27-06-2019

    27-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • mo

    அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்திப்பு

  • 4l

    ஓரின சேர்க்கை உரிமைகள் இயக்கத்திற்கான 50 வது ஆண்டு விழா கொண்டாட்டம்

  • c1

    ஈராக் போரில் துணிச்சலுடன் செயல்பட்ட வீரருக்கு அதிபர் டொனால்ட் டிரம்ப் பதக்கம் வழங்கினார்

  • b

    இடம்பெயருதலை தடுக்க அமெரிக்கா,மெக்ஸிகோ இடையிலான எல்லையில் 15,000 தேசிய பாதுகாப்பு படையினர் குவிப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்