SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

எச்ஐவி தாக்கம் எய்ட்ஸ் நிலைக்கு மாறுவது எப்போது?

2018-03-28@ 10:20:23

ஏஆர்டி.என்பது எய்ட்ஸிற்கான கூட்டுமருந்து சிகிச்சை. இது எச்ஐவி. கிருமிகளின் பெருக்கத்தை கட்டுப்படுத்தி உடலின்நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இதன்மூலம் சந்தர்ப்பவாத நோய்களின் தாக்கம் குறைகிறது. ரத்தத்தில் உள்ள சிடி-4 எனப்படும் வெள்ளைஅணுக்கள் நோய் எதிர்ப்பு சக்தியாக இருக்கும். ஆனால் உடலில் நுழைந்த எச்ஐவி.கிருமிகள் இவற்றை அழிக்கும். இதனால் எதிர்ப்பு சக்தி குறைந்து சந்தர்ப்பவாத நோய்கள் தொற்ற துவங்கும். இதனால் பல்வேறு பாதிப்புகள் உடலில் ஏற்படும். இந்நிலையையே எய்ட்ஸ் என்கிறோம்.

இந்த ஏஆர்டி. கூட்டுமருந்தை எப்போது துவங்க வேண்டும் என்பதை மருத்துவரே தீர்மானிப்பது நல்லது. பொது சிடி-4 அணுக்கள் 250க்கும் குறைந்த நிலையில் சந்தர்ப்பவாத நோய்கள் வெகுவாகத்தாக்க தொடங்கும் நிலையிலும் இந்த கூட்டு மருத்துவத்தை துவங்க வேண்டும்.

இச்சிகிச்சையை துவக்கும் முன்பு மேற்கொள்ளப்பட வேண்டிய பரிசோதனைகள்:

ரத்தப் பரிசோதனைகள் (ஹெமோகிராம்), கல்லீரல் செயல்படும் நிலைக்கான பரிசோதனை, சிடி-4 செல் எண்ணிக்கைக்கான பரிசோதனை, பெண்களுக்கு இனப்பெருக்க மண்டல புற்றுநோய் மற்றும் கர்ப்பம் தரித்ததிற்கான பரிசோதனைகள், காசநோய்க்கான பரிசோதனைகள் ஆகியவற்றை மேற்கொள்ள வேண்டும். சிகிச்சை பலனை உடல்நலன் முன்னேற்றத்தை வைத்து உணர்ந்து கொள்ளலாம். அதாவது உடல்எடை கூடும், சந்தர்ப்பவாத நோய் தாக்கம் குறையும், சிடி-4எண்ணிக்கை அதிகரிக்கும் இவற்றின் மூலம் உணர்ந்து கொள்ளலாம். இது ஒரு தொடர்சிகிச்சை. எனவே வேளைதவறாமல் இந்த மாத்திரைகளை உண்ண வேண்டும். தவறினால் கிருமிகள் மருந்துகளுக்கு எதிராக செயல்பட துவங்கும். எய்ட்ஸ் பற்றி மேலும் விபரங்களுக்கு 1800 419 1800 என்ற கட்டணமில்லா எண்ணில் 24மணிநேரமும் தொடர்பு கொள்ளலாம்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • MauCylinderBlastUP

    உ.பி.யில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறியதில் வீடு இடிந்து பெரும் விபத்து: 12 பேர் உயிரிழந்த பரிதாபம்!

  • NorthEastSyriaTurkey

    சிரியாவின் வட கிழக்கு பகுதியில் தொடர்ந்து வான்தாக்குதல் நடத்தி வரும் துருக்கி: அப்பாவி பொதுமக்கள் 9 பேர் உயிரிழப்பு!

  • DutchKingIndiaVisit

    அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள நெதர்லாந்து மன்னர்...: குடியரசு தலைவர் மாளிகையில் சிவப்பு கம்பள வரவேற்பு- புகைப்படங்கள்

  • SaddleridgeFire19

    கலிபோர்னியாவில் உள்ள அடர்ந்த காட்டுப்பகுதியில் கொழுந்து விட்டு எரியும் தீ..: பல ஏக்கர் நிலம் நாசம், லட்சக்கணக்கானோர் வெளியெற்றம்!

  • EcuadoranProtest2k19

    பொருளாதார சீர்திருத்தங்களை கண்டித்து ஈக்வடார் நாட்டில் அரசுக்கு எதிராக வெடித்த போராட்டம்: இதுவரை 7 பேர் பலி!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்