SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கொழுப்புச்சத்து உணவை கண்டறிவது எப்படி?

2018-03-27@ 10:25:18

அன்றாட உணவுகள் பலவற்றில் எண்ணெயின்தாக்கம் அதிகம் உள்ளது. டிபன் முதல் மதியஉணவு வரை இது பல்வேறு விதங்களில் இடம்பிடித்துள்ளது. இந்த எண்ணெயே பலரது உயிர்க்கும் உலை வைத்து விடுகிறது. இனிப்பு, காரம் என்று பல்வேறு வகையான பலகாரங்கள் பொதுவாக கடைகளில் பாமாயில் அல்லது வனஸ்பதியை பயன்படுத்தியே தயாரிக்கப்படுகிறது.

அடிக்கடி உண்ணப்படும் இவ்வகை உணவினால் இதில் உள்ள எண்ணெய் கொழுப்புகளாக மாறி ரத்தக்குழாய்களின் உட்புறம் படிகிறது. இதனால் ரத்தஓட்டம் பாதிக்கப்பட்டு பல்வேறு உபாதைகள் ஏற்படுகிறது. வெளிநாடுகளில் ஒவ்வொரு பொருளிலும் எவ்வளவு கொழுப்பு இருக்க வேண்டும் என்ற நிர்ணயம் உள்ளது. ஆனால் நம்நாட்டிலோ இந்தளவிற்குத்தான் கொழுப்பு இருக்க வேண்டும் என்று எந்தவிதியும் கிடையாது. யாரும் எதையும் விற்கலாம்.

மக்களும் கேள்வி கேட்காமல் சாப்பிடும் நிலையே இங்கு உள்ளது. எனவே எண்ணெய் பலகாரங்களை முடிந்தவரை தவிர்ப்பது நல்லது. பாமாயில் அல்லது வனஸ்பதி ஒருமுறை காய்ச்சியதையே திரும்ப திரும்ப உபயோகிப்பது சகஜமாகிறது. இதனால் உண்டாகும் வேதியியல் மாற்றங்களால் டிரான்ஸ்ஃபேட்டி ஆசிட் (Tranfattyacid, TFA) அதிகரிக்கிறது. இது நேரடியாக ரத்தக்குழாயை அடைக்கும். பெரும்பாலான வீடுகளில் வடை சுட்ட எண்ணெயிலேயே தாளித்தல் உள்ளிட்ட சமையல் தயாரிப்பில் ஈடுபடுவர். இதுவும் தவறு.

TFA அதிகம் உள்ள உணவுகள்:

பேக் செய்யப்பட்ட சிப்ஸ், பதப்படுத்தப்பட்ட உணவுகள், பப்ஸ், கேக், க்ரீம்பிஸ்கட், முறுக்கு, மிக்சர், பக்கோடா உள்ளிட்டவை.

TFA உணவுகளை கண்டறிவது எப்படி?:

உணவு பேக்கிங்கில் Hydrogenated fat or contains vegetable oil என்ற வாசகம் இருந்தால் அவற்றில் கொழுப்புச்சத்து மிகுந்துள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • hailstrom

  தெலுங்கானாவில் நேற்று திடீரென பெய்தது ஆலங்கட்டி மழை: இணையதளத்தில் வைரலாகும் காட்சிகள்

 • bookday

  இன்று உலக புத்தக தினம் : புத்தகங்களை நேசிப்போம், வாசிப்போம்!

 • ukraine

  உக்ரைனில் டிவி சிரியலில் அதிபராக நடித்த நகைச்சுவை நடிகர் ஜெலன்ஸ்கி நிஜத்திலும் அதிபரானார்

 • londonprotest

  லண்டனில் உலக வெப்பமயமாதலுக்கு எதிராக காலநிலை மாற்ற ஆர்வலர்கள் நடத்திவரும் போராட்டம்

 • 23-04-2019

  23-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்