SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உலகம் பலவிதம்

2018-03-27@ 10:23:24

ஒரே நேரத்தில் 1000 பேரையும் தாங்கும்

சீனாவின் ஹீபெய் மாகாணத்தில் உலகிலேயே நீளமான கண்ணாடி பாலம் சமீபத்தில் திறக்கப்பட்டது. இரு மலைகளுக்கு நடுவே 755 அடி உயரத்தில், 1601 அடி நீளத்தில் அமைக்கப்பட்டுள்ள இப்பாலம் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது. இப்பாலத்தை காண தினந்தோறும் சுமார் 20,000 பயணிகள் வருகின்றனராம். ஒரே நேரத்தில் 1000 பேர் பாலத்தில் போனால் கூட எந்த பாதுகாப்பு பயமும் இல்லை என்கின்றனர் பாலத்தை நிர்வகிக்கும் அரசு அதிகாரிகள். ஆனாலும், தற்போது ஒரே நேரத்தில் 600 பேருக்கு மேல் அனுமதிக்கப்படுவதில்லை. த்ரில்லான அனுபவத்துடன் இயற்கை அழகை ரசிக்க முடியும் என்பதால் இப்பாலத்தில் எப்போதும் கூட்டம் களை கட்டுகிறது.

கட்டுமான பணியிலும் ரோபோட்கள் வருகிறது


அமெரிக்காவை சேர்ந்த கேஸ்பிரை நிறுவனம், கட்டுமான பணிக்கான ரோபோட்களை உருவாக்கி வருகிறது. ரோபோ புல்டோசர்கள், செங்கல் அடுக்கும் ரோபோ, சூப்பர்வைசர் பணியில் டிரோன்கள் என பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. இதற்கான ரோபோக்கள் தயாரிக்கப்பட்டு சோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ரோபோட்கள் வருவதன் மூலம் கட்டுமானத் துறையில் மாபெரும் மாற்றம் நிகழும் என கேஸ்பிரை நிறுவனம் கூறுகிறது. விரைவாக பணிகளை முடிப்பதோடு, பாதுகாப்பு பிரச்னைகளுக்கு தீர்வு காணலாம், வேலைக்கு ஆள் கிடைக்காமல் கஷ்டப்பட வேண்டியும் இருக்காது என்கிறது அந்நிறுவனம்.

புல்லட் ராணி


மராட்டிய காலக்கணக்கீட்டின்படி, ‘குடிபட்வா’ என்ற மராட்டிய புத்தாண்டு ஆண்டுதோறும் மும்பையில் விமரிசையாக நடத்தப்படும். கடந்த 18ம் தேதி புத்தாண்டு தினத்தை மும்பையில் மராட்டியர்கள் கோலகலமாக கொண்டாடி மகிழ்ந்தனர். விழாவில், இளம்பெண் ஒருவர் மராட்டிய அரசர்கள் வேடத்தில் கம்பீரமாக புல்லட் ஓட்டி வருகிறார்.

விளம்பர பலகையில் ஓடிய பலான படம்

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலா அருகே மகாடி நகரம் அமைந்துள்ளது. இங்கு வர்த்தக நிறுவனங்கள்நிறைந்த பரபரப்பான பகுதியில், தனியார் நிறுவன கட்டிடத்தின் மாடியில் டிஜிட்டல் விளம்பர பலகை அமைக்கப்பட்டுள்ளது. பீக் அவர்சில் திடீரென இந்த விளம்பர பலகையில் பலான படம் ஓடியிருக்கிறது. வெறும் அரை நிமிடம் மட்டும் படம் ஓடிய நிலையில் உடனடியாக பிளக்ஸ் போர்டு அணைக்கப்பட்டுவிட்டது. ஆனாலும், வாகன ஓட்டிகள் பலரும் தங்கள் மொபைல் போனில் பலான படத்தை படம் எடுத்து சமூக வலைதளத்தில் பரவ விட்டனர். இதனால், இந்த டிஜிட்டல் பலகைக்கு உள்ளாட்சி நிர்வாகம் தடை விதித்துள்ளது. நகர மேயரே நேரடியாக விசாரணையில் களமிறங்கி உள்ளார்.

நியூயார்க்கில் பனி புயல்

அமெரிக்காவின் நியூயார்க்கில் பனிப் புயல் வீசி வருகிறது. நகரின் முக்கிய சாலைகள் எங்கும் பனிக்கட்டிகள் கொட்டிக் கிடக்கின்றன. பனிப்புயலின் வேகம் அடுத்த சில நாட்களில் மேலும் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • vote

  3-வது கட்ட மக்களவைத் தேர்தல்: 14 மாநிலங்களில் உள்ள 117 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நிறைவடைந்தது

 • hailstrom

  தெலுங்கானாவில் நேற்று திடீரென பெய்தது ஆலங்கட்டி மழை: இணையதளத்தில் வைரலாகும் காட்சிகள்

 • bookday

  இன்று உலக புத்தக தினம் : புத்தகங்களை நேசிப்போம், வாசிப்போம்!

 • ukraine

  உக்ரைனில் டிவி சிரியலில் அதிபராக நடித்த நகைச்சுவை நடிகர் ஜெலன்ஸ்கி நிஜத்திலும் அதிபரானார்

 • londonprotest

  லண்டனில் உலக வெப்பமயமாதலுக்கு எதிராக காலநிலை மாற்ற ஆர்வலர்கள் நடத்திவரும் போராட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்