SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆரோக்கியமாக குழந்தையை வளர்க்க சில டிப்ஸ்...

2018-03-26@ 21:12:58

இன்றைய கால சூழலில் கூட்டுக்குடும்பங்கள் சிதைந்து தனிக்குடித்தனங்கள் மட்டுமே உள்ளது. இதனால் பச்சிளங்குழந்தைகளை பராமரிப்பது எப்படி என்ற மூத்தோர்களின் ஆலோசனைகள் கிடைக்காமல் இன்றைய தலைமுறையினர் தடுமாறுகின்றனர்.பிறந்த நிமிடம் முதலே தாயின் வாசனையையும், தொடுதலையும், அரவணைப்பையும்தான் குழந்தைகள் அதிகம் விரும்பும். அம்மாவுடனே தூங்க விரும்பும். அம்மா தன் அருகில் இல்லை என்பதை ஒரு சிறிய அசைவிலேயே தெரிந்து கொள்ளும். அம்மாவின் குரலை கேட்ட பிறகே தனது அழுகையை நிறுத்தும்.குழந்தை வளர்ப்பு என்பது குழந்தை பிறந்த கணத்தில் இருந்து செய்ய வேண்டிய ஒரு முக்கியமான கடமையாகும். குழந்தை பிறந்து 10 வயது வரை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டு, அதன்பிறகு திடீரென குழந்தை வளர்ப்பை கையில் எடுத்தால் அக்குழந்தை உங்கள் வசப்படாது. குழந்தை பிறந்த 3 அல்லது 4 மாதங்களில் மற்றவர்களின் முகங்களை பார்த்து சிரிக்க ஆரம்பித்துவிடும். குறிப்பாக தன் அம்மாவை பார்த்து சிரிக்க தொடங்கும். அம்மாவை தேடி அழும். குழந்தை வளர்ப்பில் முக்கியமான ஒன்று பிறந்த குழந்தைகளின் குளியல் முறை. குழந்தைகளின் உடம்பு மிக மிருதுவானது, அதன் மேல் என்ன அழுக்கு படிய போகுது என இருக்கக்கூடாது. குளிக்க வைப்பது மிக முக்கியம். குளித்தவுடன் மிருதுவாக துடைத்து மெல்லிய உடை அணிவிக்க வேண்டும். பொட்டு, பவுடர் போன்றவை குறைந்தது 5 மாதங்களுக்கு வைக்கக்கூடாது. மை, பொட்டு போன்றவைகளையும் தவிர்க்கலாம். பிறந்தது முதல் 6மாதம் வரை குழந்தைக்கு தாய்ப்பால் மட்டுமே கண்டிப்பாக தர வேண்டும். பாட்டில் பால் கொடுக்கக்கூடாது.

6வது மாதம்ஆப்பிள் தோல் சீவி குக்கரில் வேக வைத்து, சிறிது நெய் சேர்த்து கொடுக்கலாம். கோதுமை, ஜவ்வரிசி, ராகி கூழ் போன்றவை கொடுக்கலாம். முக்கியமாக கவனிக்க வேண்டியது, ஒரு புது உணவு கொடுத்தால் குறைந்தபட்சம் 4நாட்கள் வேறு எந்த புது உணவும் அறிமுக படுத்த கூடாது. அப்போதுதான் அந்த உணவால் ஏதாவது அலர்ஜி ஆகிறதா என்று அறிய முடியும். முதல் நாள் மிக கொஞ்சமாகவும் அடுத்தடுத்து சிறிது அதிகமாக தரலாம்.
7, 8வது மாதங்கள்ஒரு வேளை கூழ், ஒரு வேளை பருப்பு சதம், பால் சாதம், ஆப்பிள், வேக வைத்து மசிக்கப்பட்ட காரட், உருளைக்கிழங்கு, ரொட்டி பால் சேர்த்து கொடுக்கலாம். பருப்புடன், காரட், கீரை, ஒரு வெங்காயம், சிறிய தக்காளி துண்டு எல்லாம் குக்கரில் குழைய வேக வைத்து கொடுக்கலாம். இந்த மாதத்தில் பசும்பால் அறிமுகப்படுத்தலாம். 9, 10வது மாதம்இந்த மாதத்தில் இட்லி, தோசை, சப்பாத்தி, முட்டை, போன்றவைகளை தரலாம்.

11, 12 மாதங்கள் நமது வீட்டில் செய்யும் உணவுகளை கொடுத்து குழந்தைக்கு பழக்கப்படுத்தலாம். எக்காரணம் கொண்டும் மிக்ஸ்யில் அடித்து கொடுக்கக்கூடாது. பார்க்கும் போதே சாப்பிட தூண்டும் வகையிலும், சத்துள்ள உணவுகளை கொடுக்க வேண்டும். குழந்தைகள் சாப்பிட ஒரே தட்டு, டம்ளர் வைத்து கொள்வதும், அதை அடிக்கடி வெந்நீரில் கழுவதும் நல்லது. காரம், புளிப்பு போன்றவைகளை குறைவாக தரலாம். குழந்தை அதிகம் சாப்பிடவில்லை என்று கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. அதற்கு பதிலாக உணவு வகைகளை மாற்றி தரலாம்.உணவை கொடுக்கும் நேரம் மிகவும் முக்கியம். 7 மணிக்கு ஒரு குழந்தை எழுந்தால், எழுந்தவுடன் பசும்பால் அரை டம்ளர் கொடுத்து, 8மணிக்கு குளிக்க வைக்கலாம். இந்த பழக்கமும், கழிவறை செல்லும் பழக்கமும் பின்னாளில் குழந்தைகள் பள்ளி செல்லும் போது பயன்படும்.8.30 மணிக்கு காலை உணவு, திட உணவாக கொடுக்கலாம். 10.30 மணிக்கு தினம் ஒரு ஜூஸ் அல்லது சூப் கொடுங்கள், அல்லது ஒரு பழம் தரலாம்.மதியம் 12மணிக்கு திட உணவும், 4மணி வரை எதுவும் தரதேவை இல்லை. பிறகு பால், இரண்டு பிஸ்கட் அல்லது ஒரு ரொட்டி துண்டு கொடுக்கலாம். இரவு 7.30 மணிக்கு முழு திட உணவும், 9மணிக்கு மீண்டும் பால் கொடுக்கலாம்.இவ்வாறு கொடுத்து வளர்த்தால் அக்குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களாகும்போது நோய்கள் தாக்காமல் ஆரோக்கியமாக வளரும். குழந்தை வளர்ப்பது சவாலான மகிழ்ச்சியே.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 14-12-2019

  14-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • po13

  கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை முன்னிட்டு வண்ணமயமான ஒளிவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட போலந்து: ஜொலிக்கும் புகைப்படம்

 • wagle_hunttt

  கஜகஸ்தானில் பாரம்பரிய போட்டி : கழுகுடன் வேட்டைக்கு செல்லும் கசாக் மக்கள்

 • modi13

  நாடாளுமன்றம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதின் 18ம் ஆண்டு நினைவு நாள்: உயிரிழந்த வீரர்களின் படங்களுக்கு பிரதமர் மோடி உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை

 • 3dhmes_111

  3டி பிரின்டர் மூலம் அச்சிடப்பட்ட உலகின் முதல் வீடு ; மெக்சிக்கோவில் பயன்பாட்டுக்கு வந்தது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்