SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தெரிஞ்சுக்கலாம் வாங்க...!

2018-03-26@ 10:21:53

சர்க்கரை நோயாளிகளின் நரம்புகளும், ரத்தநாளங்களும் காலில் பாதிக்கப்படுகின்றன. இதனால் அவர்களுடைய கால் உணர்வு இழந்து, ஊட்டமும் இழந்து போய்விடுகிறது. காலில் வெப்பம், முள், கல் குத்தினாலோ அவர்களால் உணர முடிவதில்லை. அவ்வளவு ஏன் செருப்பு கடிப்பது கூட தெரியாது. இதனால் புண் ஏற்பட்டு பல சமயங்களில் காலை வெட்டி எடுக்கும் சூழ்நிலை கூட ஏற்படலாம். எனவே சர்க்கரை நோயாளிகள் செருப்பு இல்லாமல் வெளியில் செல்லக்கூடாது.

குளிக்கும் நீரில் வேப்பிலை, கற்பூரம் அல்லது எலுமிச்சம்பழத்தின் தோல் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை போட்டு குளித்தால் உடல் மணக்கும். மிகவும் வாசனையான சோப்புகள் சருமத்திற்கு நல்லதல்ல. அதுவும் கோடைகாலத்தில் இவற்றை குறைத்து கொள்வதே நல்லது. சோப்பிற்குப்பதிலாக பச்சைப்பயறு மாவு அல்லது கடலைமாவுடன், கஸ்தூரிமஞ்சள், சந்தனம், வெட்டிவேர், பூலாங்கிழங்கு, ரோஜாஇதழ் போன்றவற்றை காயவைத்து அரைத்து உடம்பிற்கு தேய்த்து குளிக்கலாம். இது சருமஅழகையும் அதிகரிக்கும். உடலையும் இயற்கை நறுமணத்துடன் வைக்கும்.

1998ல் முதன்முதலாக சைல்டுலைன் 1098இலவச தொலைபேசி சேவை தொடங்கப்பட்டது. 2006ல் முதன்முதலாக மத்தியஅரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் மூலம் உதவி பெறப்பட்டு தேசியஅளவிலான திட்டம் என்று அங்கீகரிக்கப்பட்டது. இந்தியாவின் 255நகரங்களிலும், 30மாநிலங்களிலும் தமிழ்நாட்டில் 28இடங்களிலும் இச்சேவை செயல்பட்டு வருகிறது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • church_cathdral11

    நெருப்புக்கு இரையான 850 ஆண்டுகள் பழமையான நோட்ரேடேம் தேவாலயம் : அதிக அழகுடன் மீட்டெடுக்க போராடும் பணியாளர்கள்

  • apolo_50vinkalam1

    நிலவில் கால் பதித்த 50 ஆண்டு தின கொண்டாட்டம் : விளக்கு அலங்காரத்தில் ஜொலிக்கும் 363 அடி நீள அப்போலோ 11 விண்கலம் மாதிரி!!

  • 18-07-2019

    18-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • intelexopchina17

    சீனாவில் நடைபெற்ற சர்வதேச ஆட்டோமொபைல் எக்ஸ்போ: Audi உள்ளிட்ட நிறுவனங்களின் புதிய கார்கள் அறிமுகம்

  • 17-07-2019

    17-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்