SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

புதிய ஹோண்டா ஆக்டிவா 5ஜி ஸ்கூட்டர்

2018-03-25@ 00:38:23

கடந்த மாதம் நடந்த சர்வதேச ஆட்டோ எக்ஸ்போவில் கூடுதல் சிறப்பம்சங்களுடன் ஹோண்டா ஆக்டிவா 5ஜி ஸ்கூட்டர் அறிமுகம் செய்யப்பட்டது.  இந்தியர்கள் அதிகம் விரும்பும் ஸ்கூட்டர் மாடல் என்பதால், வாடிக்கையாளர்களிடத்தில் அதிக எதிர்பார்ப்பு நிலவியது. இந்த சூழலில், புதிய ஹோண்டா  ஆக்டிவா 5ஜி ஸ்கூட்டர் இணையதளத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. இதன்மூலம், இந்த ஸ்கூட்டர் வர்த்தக ரீதியில் விற்பனைக்கு வந்துள்ளது. இப்புதிய  5ஜி ஸ்கூட்டரில், புதிய ப்ரேம் அமைப்பும், சஸ்பென்ஷனும் பெற்றுள்ளது. 109 கிலோ எடை கொண்டது. இதன் இருக்கை உயரம் 765 மி.மீ ஆக உள்ளது.  5.3 லிட்டர் கொள்திறன் கொண்ட பெட்ரோல் டேங்க் பொருத்தப்பட்டுள்ளது. 18 லிட்டர் கொள்திறன் கொண்ட பொருட்கள் வைக்க ஸ்டோரேஜ் வசதி  இருக்கிறது. 109.19 சிசி சிங்கிள் சிலிண்டர் ஏர்கூல்டு இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 8 பிஎச்பி பவரையும், 9 என்எம்  டார்க் திறனையும் வழங்கும். மணிக்கு 83 கி.மீ வேகம் வரை செல்லும். வி-மேட்டிக் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

முன், பின் சக்கரத்தில் 130 மி.மீ டிரம் பிரேக் பொருத்தப்பட்டுள்ளது. இதனுடன், ஹோண்டா காம்பி பிரேக்கிங் சிஸ்டமும் இருக்கிறது. இந்த  ஸ்கூட்டரில் 10 அங்குல சக்கரங்களும், 90/100 அளவுடைய ட்யூப்லெஸ் டயர்களும் பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டர் முழுவதும் மெட்டல் பாடி என்பது முக்கியமான விஷயம். அத்துடன் எல்இடி ஹெட்லைட், டிஜிட்டல் மற்றும் அனலாக்  மீட்டருடன்கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் ஆகியவை இடம்பெற்றுள்ளது. இருக்கையை திறப்பதற்கு விசேஷ ஸ்மார்ட் சீட் ஓபனிங் வசதியும்,  மொபைல் சார்ஜர் சாக்கெட்டும் உள்ளன. ஸ்டான்டர்டு மற்றும் டீலக்ஸ் என இரு மாடல்களில் கிடைக்கிறது. ஸ்டான்டர்டு மாடல் ₹52,460 (டெல்லி  எக்ஸ்ஷோரூம்) விலையிலும், டீலக்ஸ் மாடல் ₹54,325 விலையிலும் கிடைக்கிறது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-04-2019

    19-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 18-04-2019

    18-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • chinaautoshow

    சீனாவில் நடைபெற்ற ஆட்டோ ஷோ 2019: BMW, Mercedes-Benz நிறுவனங்களின் புதிய கார்கள் அறிமுகம்

  • thirunangai

    கூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழா...சுவாமி திருக்கண் திறக்கும் நிகழ்ச்சியில் தாலி கட்டிக்கொண்ட திருநங்கைகள்

  • chinaboat

    உலகிலேயே நிலத்திலும், நீரிலும் செல்லும் படகை தயாரித்து சீனா சாதனை: சோதனை ஓட்டம் வெற்றி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்