SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

டட்சன் கோ மற்றும் கோ ப்ளஸ் கார் ஸ்பெஷல் எடிசன்

2018-03-25@ 00:38:22

டட்சன் கோ ரீமிக்ஸ் மற்றும் கோ ப்ளஸ் ரீமிக்ஸ் என்ற பெயரில் இப்புதிய கார்கள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றன. டட்சன் கோ  காரின் ரீமிக்ஸ் எடிசன் மாடல் விசேஷமான கருப்பு வண்ணத்தில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதனுடன் கவர்ச்சிகரமான ஆரஞ்ச் வண்ண  பாடி டீக்கெல் எனப்படும் விசேஷ ஸ்டிக்கர் அலங்காரம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. டட்சன் கோ ப்ளஸ் ரீமிக்ஸ் எடிசன் மாடல் ஸ்டார்ம் ஒயிட் மற்றும் கருப்பு ஆகிய இரட்டை வண்ண கலவையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.  இந்த காரிலும் ஆரஞ்ச் வண்ண அலங்காரம் வசீகரிக்கிறது. இந்த இரண்டு கார்களும் கருப்பு வண்ண இன்டீரியர் மற்றும் ஆரஞ்ச் வண்ண  அலங்காரத்துடன் ஜொலிக்கிறது.

ரிமோட் கீலெஸ் என்ட்ரி வசதி, புளூடூத் வசதியுடன் ஆடியோ சிஸ்டம், கவர்ச்சிகரமான சீட் கவர்கள், முற்றிலும் கருப்பு வண்ண முன்பக்க க்ரில்  அமைப்பு, கருப்பு வண்ண வீல் கவர்கள், பியானோ பிளாக் என்ற பளபளப்பு மிகுந்த கருப்பு வண்ண இன்டீரியர், ரியர் ஸ்பாய்லர், க்ரோம் பூச்சுடன்  புகைப்போக்கி மற்றும் பம்பர் அலங்காரத்துடன் வந்துள்ளது. டட்சன் கோ ஹேட்ச்பேக் கார் 5 பேர் செல்வதற்கான இடவசதியையும், டட்சன் கோ ப்ளஸ்  கார் 7 பேர் செல்வதற்கான இடவசதியையும் பெற்றுள்ளது. இந்த இரண்டு கார்களிலும் பாலோ மீ ஹெட்லைட், ஸ்பீடு சென்சிடிவ் எலக்ட்ரிக் பவர்  ஸ்டீயரிங், ஏசி, முன்புற கதவுகளுக்கான பவர் விண்டோஸ், யுஎஸ்பி சார்ஜ் பாயிண்ட் மற்றும் சென்ட்ரல் லாக்கிங் வசதிகள் இருக்கின்றன. டட்சன் கோ  ரீமிக்ஸ் எடிசன் மாடல் 4.21 லட்சம் (டெல்லி எக்ஸ்ஷோரூம்) விலையிலும், டட்சன் கோ ப்ளஸ் ரீமிக்ஸ் எடிசன் மாடல் ₹4.99 லட்சம்  விலையிலும் விற்பனைக்கு கிடைக்கும்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-04-2019

    19-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 18-04-2019

    18-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • chinaautoshow

    சீனாவில் நடைபெற்ற ஆட்டோ ஷோ 2019: BMW, Mercedes-Benz நிறுவனங்களின் புதிய கார்கள் அறிமுகம்

  • thirunangai

    கூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழா...சுவாமி திருக்கண் திறக்கும் நிகழ்ச்சியில் தாலி கட்டிக்கொண்ட திருநங்கைகள்

  • chinaboat

    உலகிலேயே நிலத்திலும், நீரிலும் செல்லும் படகை தயாரித்து சீனா சாதனை: சோதனை ஓட்டம் வெற்றி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்