SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி 700

2018-03-25@ 00:38:21

மஹிந்திராவின் அடுத்த வரவு எக்ஸ்யூவி 700. இது, மஹிந்திரா எக்ஸ்யூவி500 காரைவிட விலை உயர்ந்த ரகத்தில் நிலைநிறுத்தப்படுகிறது. க்வாட் -  ப்ரேம் என்ற பிளாட்பார்மில் இப்புதிய கார் கட்டமைக்கப்பட்டுள்ளது. அதிக உறுதியும், எடை குறைவாகவும் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த கார், மூன்று இருக்கை வரிசை அமைப்பை பெற்றிருக்கிறது. இப்புதிய காரில் 7 பெரியவர்கள் தாராளமாக அமர்ந்து பயணிக்கும் இடவசதி உள்ளது.   8 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்போடெயின்மென்ட் சிஸ்டம், ட்யூவல் ஸோன் ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், எலக்ட்ரிக்  சன்ரூப் உள்ளிட்ட ஏராளமான பிரிமியம் வசதிகளையும் பெற்றிருக்கிறது. இந்த காரின் இரண்டாவது இருக்கை பயணிகளுக்காக 10.1 அங்குல  திரையுடன்கூடிய சென்டர் கன்சோல் தனியாக கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், 9.2 அங்குல டி.வி திரைகள் இரண்டும் ஹெட்ரெஸ்ட்டில்  பொருத்தப்பட்டுள்ளது.

இந்த சென்டர் கன்சோல் சிஸ்டம் மூலமாக வைபை தொடர்பு, ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே சாப்ட்வேர்களை சப்போர்ட் செய்யும்  வசதியையும் அளிக்கும். மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்திடமிருந்து சப்ளை பெறப்படும் 7 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. 9 ஏர்பேக், எமெர்ஜென்ஸி பிரேக்கிங் சிஸ்டம், கண்ணுக்கு புலப்படாத இடத்திலிருந்து வரும் வாகனங்கள் மற்றும் இதர தடைகள் குறித்து எச்சரிக்கும்  பிளைன்ட் ஸ்பாட் டிடென்க்ஷன், தடம் மாறுதலை எச்சரிக்கும் வசதி, ஹை பீம் அசிஸ்ட், டிராபிக் சேப்டி அசிஸ்ட் என பல நவீன பாதுகாப்பு வசதிகளை  பெற்றுள்ளது.  சாங்யாங் ஜி4 ரெக்ஸ்டன் அடிப்படையில் ரீபேட்ஜ் செய்யப்பட்டுள்ள இப்புதிய மஹிந்திரா கார், ₹25 லட்சம் விலையில் விற்பனைக்கு அறிமுகம்  செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-06-2019

    19-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • bji

    முன்னாள் சுகாதார அமைச்சர் ஜே.பி.நட்டாவை பாஜக செயல் தலைவராக அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவிப்பு

  • suvami

    திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் பிரம்மோற்சவ விழா 5ம் நாளான இன்று சுவாமி நாச்சியார் வீதி உலா

  • mango

    கிருஷ்ணகிரியில் 27வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி: மலர்கள் கொண்டு உலக கோப்பை வடிவமைப்பு

  • earth

    சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் சக்தி வாழ்ந்த நிலநடுக்கம்: 12 பேர் உயிரிழப்பு,125 பேர் படுகாயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்