SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

டாடா இ விஷன் மின்சார கான்செப்ட் கார்

2018-03-25@ 00:38:20

ஜெனீவா மோட்டார் ஷோவில் ஒரு அட்டகாசமான மின்சார செடான் காரின் கான்செப்ட்டை டாடா அறிமுகம் செய்தது. டாடா இ- விஷன் கான்செப்ட்  என்ற பெயரிலான கார் ஜெனீவா மோட்டார் ஷோவில் குறிப்பிடத்தக்க கார்களில் ஒன்றாக பாராட்டுதல்களை பெற்றது.டாடா மோட்டார்ஸ் அங்கமாக  செயல்படும் லேண்ட்ரோவர் நிறுவனத்தின் ஒமேகா என்ற மின்சார கார்கள் உருவாகும் பிளாட்பார்மில்தான் இந்த காரும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த  காரின் வடிவமைப்பு மேலை நாட்டு சொகுசு கார்களுக்கு இணையானதாக இருந்ததால், பலரின் புருவத்தை உயர்த்தியது. டாடா எச்5எக்ஸ் மற்றும் 45  எக்ஸ் கார்கள் உருவாக்கப்பட்ட டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் இம்பேக்ட் 2.0 டிசைன் தாத்பரியத்தில்தான் இந்த காரும் உருவாக்கப்பட்டு  இருக்கிறது. மிக உயர்தரமான கட்டமைப்பில் வருவதும் எல்லோரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

சொகுசு கார்களில் இருப்பது போன்று, பட்டன் மூலமாக முன் இருக்கையை அட்ஜெஸ்ட் செய்யும் வசதியும் இந்த கான்செப்ட் மாடலில்  கொடுக்கப்பட்டுள்ளது. தட்டையான அடிப்பாகம் கொண்ட ஸ்டீயரிங் வீல், பேடில் ஷிப்ட் கொடுக்கப்பட்டு இருக்கிறது. ப்ரேம் இல்லாத கண்ணாடி  ஜன்னல்கள் இருக்கின்றன. டெஸ்லா கார்களுக்கு இணையாக என்று கூறுவதற்கான காரணம், இந்த கார் 0-100 கி.மீ வேகத்தை 7 வினாடிகளில்  எட்டிவிடும். மணிக்கு 200 கி.மீ வேகம் வரை பயணிக்கும் வல்லமையை பெற்றுள்ளது.இதுவரை தயாரிக்கப்பட்ட டாடா கார்களிலேயே மிகவும் அதிவேகமான ஆக்சிலரேஷன் கொண்ட காராகவும் இருக்கிறது. இந்த காரில் இருக்கும்  பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால், அதிகபட்சமாக 300 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். டாடா இ விஷன் மின்சார கார் 2020 - 2022ம்  ஆண்டு காலக்கட்டத்தில் உற்பத்தி துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் மிக விலை உயர்ந்த கார் மாடலாக இது இருக்கும்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • vote

    3-வது கட்ட மக்களவைத் தேர்தல்: 14 மாநிலங்களில் உள்ள 117 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நிறைவடைந்தது

  • hailstrom

    தெலுங்கானாவில் நேற்று திடீரென பெய்தது ஆலங்கட்டி மழை: இணையதளத்தில் வைரலாகும் காட்சிகள்

  • bookday

    இன்று உலக புத்தக தினம் : புத்தகங்களை நேசிப்போம், வாசிப்போம்!

  • ukraine

    உக்ரைனில் டிவி சிரியலில் அதிபராக நடித்த நகைச்சுவை நடிகர் ஜெலன்ஸ்கி நிஜத்திலும் அதிபரானார்

  • londonprotest

    லண்டனில் உலக வெப்பமயமாதலுக்கு எதிராக காலநிலை மாற்ற ஆர்வலர்கள் நடத்திவரும் போராட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்