SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அவசரத் தேவைக்கான பல்வேறு தொடர்பு எண்கள்

2018-03-24@ 12:14:55

அவசர உதவிகளுக்காக பல்வேறு துறைகள் விரைந்து செயல்பட்டு வந்தாலும் தகவல் பரிமாற்றத்தினால் ஏற்படும் தாமதம் பல நேரங்களில் சம்பந்தப்பட்டவர்களுக்கு உரிய பலனைத் தருவதில்லை. எனவே ஒவ்வொரு துறை சார்பிலும் மாநிலம் முழுவதும் ஒரேவிதமான தொடர்பு எண்ணை பயன்படுத்தும் பழக்கம் பல ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வருகிறது.
இருப்பினும் போலீஸ், தீயணைப்புத்துறை உள்ளிட்ட சில எண்களே மக்கள் மனதில் பதிந்துள்ளது. பல்வேறு துறைகள், தேவைகளுக்கு ஏற்ப எண்களையும் நாம் குறித்து வைத்துக்கொண்டால் தொடர்பு கொள்ளவும், பயன்பெறவும் உதவிகரமாக இருக்கும்.

அதற்கான பட்டியல் இதோ:


இலவச மருத்துவ ஆலோசனை, அரசு மருத்துவமனையில் நடைபெறும் பிரச்னைகள், தாமதமாக வரும் டாக்டர்கள், பன்றித் தொல்லை போன்ற நோய் பரப்பும் விஷயங்களை 104 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.
அதேபோல் போலீசிற்கு 100 என்ற எண்ணிலும், போலீஸ் எஸ்எம்எஸ்சிற்கு 95000 99100, போலீஸ் மீதான ஊழல் புகாருக்கு எஸ்எம்எஸ் 98409 83832 என்ற எண்ணிற்கும் தொடர்பு கொள்ளலாம்.

தீயணைப்பிற்கு 101,

போக்குவரத்து விதிமுறை மீறலுக்கு 103, போக்குவரத்து விதிமுறை மீறல் எஸ்எம்எஸ் 98400 00103,

விபத்திற்கு 100, 103,

ஆம்புலன்ஸ் 102, 108,

பெண்களுக்கான அவசர உதவி 1091,

குழந்தைகளுக்கான அவசர உதவி 1098,

மூத்த குடிமக்களுக்கான அவசர உதவி 1253,

தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி 1033,

கடலோர பகுதிக்கான அவசர உதவி 1093,

ரத்த வங்கி அவசர உதவி 1910,

கண் வங்கி அவசர உதவி 1919

ஆகிய எண்களுக்கு தங்களின் தேவைக்கேற்ப தொடர்பு கொண்டு உதவிகளைப் பெறலாம்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 29-05-2020

    29-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 28-05-2020

    28-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 26-05-2020

    26-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 25-05-2020

    25-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 24-05-2020

    24-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்