SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மார்ச் 24ம் தேதி காசநோய் தினம்: இந்தியாவில் லட்சம் பேரில் 203 பேருக்கு காசநோய்

2018-03-23@ 16:41:31

காசநோய் கிருமியை உலகுக்கு அறிமுகப்படுத்திய மார்ச் 24ம் தேதி, காசநோய் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. நடப்பாண்டு காசநோய் ஒழிப்பில் அனைவரும் தலைவர்களாக பங்கேற்க வேண்டும் என்ற கருத்துருவை கொண்டு அனுசரிக்கப்படவுள்ளது. இதுகுறித்து சேலம் மாவட்ட ஊரக நலப்பணிகள் துணை இயக்குநர்(காசநோய்) கணேஷ்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
 
ஏற்கனவே, காசநோயால் பாதிக்கப்பட்டவர்களின் முறையற்ற இருமல், தும்மல் மற்றும் கண்ட இடங்களில் சளி துப்புதல் போன்றவற்றால், காற்றின் மூலம் மற்றவர்களுக்கும் அந்நோய் பரவுகிறது. நோய் எதிர்ப்பு திறன் குறைவாக உள்ள யாருக்கு வேண்டுமானாலும் காசநோய் வரலாம். முடி மற்றும் நகத்தை தவிர அனைத்து இடங்களையும் காசநோய் தாக்கும். குறிப்பாக, நுரையீரலை அதிகம் பாதிக்கிறது. பிறந்த குழந்தைக்கு காசநோய் பாதிப்பில் இருந்து பாதுகாக்க பிசிஜி தடுப்பூசி போடப்படுகிறது.

தொடர்ந்து 2 வார இருமல், பசியின்மை, எடை குறைவு, மாலை காய்ச்சல், சளியில் ரத்தம் வருதல் போன்றவை காசநோயின் அறிகுறிகள். எச்ஐவி, நீரழிவு நோய், மது அருந்துதல், புகை பிடித்தல் போன்ற பழக்கங்களில் உள்ளவர்களுக்கு எளிதில் காசநோய் தாக்கும். அதிநவீன பி-நாட் பரிசோதனை உள்பட அனைத்து பரிசோதனைகளும், அரசு மருத்துவமனைகளில் இலவசமாக மேற்கொள்ளப்படுகிறது. காசநோய் பாதித்தவர்கள் 6 முதல் 8 மாதம் வரை மருந்து சாப்பிட்டால், முற்றிலும் குணப்படுத்தலாம்.

ஊட்டச்சத்து பெறுவதற்காக காசநோயாளிகளுக்கு மாதம் ரூ.500 உதவித்தொகை வழங்கப்படுகிறது. மேலும், உழவர் பாதுகாப்பு அட்டைக்கு ரூ.,000 வழங்கப்படுகிறது. காசநோய் பாதிப்பு மற்றும் காசநோய் இறப்பு ஆகியவற்றில் உலகில் 3-ல் ஒரு பங்கு இந்தியாவில் நடக்கிறது. இந்தியாவில் ஒரு லட்சம் பேரில், 203 நபர்களுக்கு காசநோய் பாதிப்பு இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த பாதிப்பு, தங்களுக்கு இருப்பது தெரியாமலேயே பலர் உள்ளனர். தற்போது இந்தியாவில் 1.5 மில்லியன் பேர் காசநோயால் பாதித்துள்ள நிலையில், வரும் 2020ம் ஆண்டு இந்த எண்ணிக்கை 3.5 மில்லியனாக அதிகரிக்க வாய்ப்புள்ளது.
 
வரும் 2025ம் ஆண்டுக்குள் காசநோய் பாதிப்பு, இறப்பு ஆகியவற்றை பூஜ்யம் ஆக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. காசநோயாளிகளின் வீடுகளுக்கே சென்று மருந்துகள் வழங்கவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும், பல்வேறு ஏற்பாடுகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு கணேஷ்குமார் தெரிவித்தார்.

தயக்கம் தேவையில்லை

நீரழிவு, ரத்த அழுத்தம் போன்றவற்றை கட்டுப்படுத்த முடியுமே தவிர, முழுமையாக குணப்படுத்த முடியாது. ஆனால், காசநோய்க்கு உரிய மருந்து எடுத்துக் கொண்டால், முழுமையாக குணப்படுத்த முடியும். குணப்படுத்தவே முடியாத நீரழிவு, ரத்த அழுத்தத்தை வெளிப்படையாக கூறும் நாம், காசநோய் குறித்து வாய் திறக்க மறுப்பது வேதனையான ஒன்று. எனவே, காசநோய் குறித்த தயக்கம் கொள்ளாமல், மற்றவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • rally

  சீனாவில் அமைதியை நிலை நிறுத்தும் வகையில் நடைபெற்ற பேரணி: லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்பு

 • slide

  சீனாவில் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்த வாட்டர் ஸ்லைடு பூங்கா: புகைப்படங்கள்

 • torch

  சீனாவில் நடைபெற்ற டார்ச் திருவிழா: நாட்டுப்புற பாடல்கள் பாடியும், நடனமாடியும் மக்கள் உற்சாகம்

 • statue

  சாலைகளில் வைக்கப்பட்டுள்ள சிலைகள் உயிர் பெற்றால் எப்படியிருக்கும்? என்ற கற்பனைக்கு உயிர் கொடுத்தனர் பெல்ஜியம் சித்திரக் கலைஞர்கள்

 • fire

  லண்டனில் உள்ள ஷாப்பிங் மாலில் பயங்கர தீ விபத்து: அருகில் உள்ள மக்கள் வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தல்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்