SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கிணற்று பாசனத்தால் அறுவடைக்கு தயாராகும் நெல்

2018-03-23@ 10:29:39

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே கிணற்று பாசனத்தின் மூலமாக விளைந்து நிற்கும் நெற்கதிர்கள் அறுவடைக்கு தயாராகி வருகின்றன. ஆண்டிபட்டி ஒன்றியத்தில் ராஜக்காள்பட்டி, புள்ளிமான்கோம்பை , கரட்டுபட்டி, சீரங்கபுரம், அணைக்கரைபட்டி உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் 100 ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டு வந்தது. கடந்த 7 ஆண்டுகளாக போதிய மழைப் பொழிவு இல்லாததால், நீர் நிலைகள் வறண்டதால், கால்வாய் பாசனம், கிணற்று பாசனம் முற்றிலும் குறைந்து விட்டது.

கடந்த ஆண்டு பருவமழை மற்றும் ஓகி புயலால் மழை பெய்தும் சில நீர் நிலைகளில் தண்ணீரின்றி வறண்டது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் உயரவில்லை. இதன் காரணத்தினால் சாகுபடி செய்த பயிர்களை காப்பாற்ற வேண்டி பல லட்சங்கள் செலவு செய்து ஆழ்துளை கிணறுகளை விவசாயிகள் அமைத்தனர். இதன் மூலமாக கிணற்று பாசனம் செய்து நெல்பயிர்களை காப்பாற்றி வருகிறன்றனர். இந்த நிலையில் நெல் பயிர்கள் விளைந்து அறுவடைக்காக காத்து நிற்கிறது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • iraqbikersride

    ஈராக்கில் சகோதரத்துவத்தை வலியுறுத்தி இருசக்கர வாகன ஓட்டிகள் நாடு முழுவதும் சுற்றுப்பயணம்

  • niagarafallssnow

    கனடாவில் பனிபொழிவால் உறைபனியாக காட்சியளிக்கும் நயாகரா நீர்வீழ்ச்சி

  • SiddhagangaSivakumarasamy

    பெங்களூரு சித்தகங்கா மடாதிபதி சிவகுமாரசாமியின் உடல் நல்லடக்கம் : அமைச்சர்கள் பங்கேற்பு

  • govindpmawards

    பிரதமரின் தேசிய பாலர் விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

  • 23-01-2019

    23-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்