SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஊட்டியில் கனமழை : அணைகள் நிரம்ப துவங்கின

2018-03-23@ 10:25:18

ஊட்டி: தென்மேற்கு வங்ககடலில் கடந்த வாரம் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு  மண்டலம் காரணமாக நீலகிரி மாவட்டத்தில் கடந்த 5 நாட்களுக்கும் மேலாக கனமழை  பெய்து வந்தது. ஊட்டி, குன்னூர், மஞ்சூர் மற்றும் நீர்பிடிப்பு பகுதிகளான  அப்பர்பவானி, அவலாஞ்சி, எமரால்டு உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. இந்த  மழையால் குடிநீர் ஆதாரங்கள் நிரம்பி வருகிறது. மின் உற்பத்திக்கு ஆதாரமாக  உள்ள அணைகள் உள்ளிட்டவைகள் நிரம்ப துவங்கின.

வனப்பகுதிகளில் காட்டு தீ  ஏற்பட கூடிய அபாயமும் நீங்கியது. இந்நிலையில், கடந்த இரு நாட்களாக மழை  பெய்யாத நிலையில் நேற்று மாலை காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு கனமழை பெய்த  துவங்கியது. கனமழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைநீர் புகுந்தது. இந்த  திடீர் மழை சில மணி நேரம் நீடித்தது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • NagoroJapanVillage

    ஜப்பானில் உள்ள தீவில் வெறிச்சோடிய கிராமத்தை பொம்மைகளால் உயிரூட்டிய பெண்: குவியும் சுற்றுலா பயணிகள்

  • FallFoilageWorld

    உலகின் பல்வேறு நாடுகளில் எடுக்கப்பட்ட இலையுதிர் காலத்தின் அழகிய புகைப்படங்கள்

  • WillaHurricaneMexico

    மெக்சிகோவை மிரட்டவிருக்கும் வில்லா புயல்: முன்னேற்பாடு பணிகள் தீவிரம்

  • italyrain

    இத்தாலியில் பெய்த ஆலங்கட்டி மழை : பனிக்கட்டிகள் இறுகி பாறை போல் காட்சியளித்த சாலைகள்

  • 23-10-2018

    23-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்