SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உசிலம்பட்டி அருகே 6 நாளுக்கு ஒருமுறை குடிநீர் சப்ளை

2018-03-23@ 10:24:06

உசிலம்பட்டி:  உசிலம்பட்டி அருகே 6 நாளுக்கு ஒருமுறை குடிநீர் வழங்கப்பட்டதை கண்டித்து பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். உசிலம்பட்டி அருகே எ.புதுப்பட்டி அடுத்துள்ளது சி.நடுப்பட்டி. இப்பகுதியில்  கடந்த ஆறு  மாதங்களாக குடிநீர் சீராக வழங்கவில்லை. 4 நாள் அல்லது 6 நாளுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்து வந்தனர். இது  குறித்து  செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில்   பலமுறை மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் குடிநீர் சீராக வழங்கக் கோரி பாப்பாபட்டி உசிலம்பட்டி  மெயின் சாலையில் நேற்று மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த காவல்துறை சார்புஆய்வாளர் ராமச்சந்திரன், செல்லம்பட்டி யூனியன் கிளார்க் செந்தில்குமார்   மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். உடனடியாக அருகே செல்லக்கூடிய கூட்டுக் குடிநீர் குழாயிலிருந்து புதிய இணைப்பு கொடுக்கப்பட்டு, குடிநீருக்கு ஏற்பாடு செய்யப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • vehicletest

    பாராளுமன்ற தேர்தலையொட்டி தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ள தேர்தல் கண்காணிப்பு படையினர்

  • germanybuilding

    ஜெர்மனியில் 1970ம் ஆண்டு கட்டப்பட்ட பழைய கட்டிடம் வெடி வைத்து தகர்ப்பு: புகைப்படங்கள்!

  • siriyaa

    ஐ.எஸ் பயங்கரவாதிகள் பிடியில் இருந்த கடைசி எல்லைப்பகுதியை கைப்பற்றியது சிரியா

  • londonprotest

    பிரிட்டன் பிரதமருக்கு எதிராக மீண்டும் தலைதூக்கும் போராட்டம்: பிரெக்ஸிட் ஒப்பந்தத்தை எதிர்த்து மக்கள் பேரணி!

  • 25-03-2019

    25-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்