SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பண்ணாரி வனப்பகுதியில் சாலையை கடந்த புலி வாகன ஓட்டிகள் அச்சம்

2018-03-20@ 21:18:44

சத்தியமங்கலம்:  சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் புலி, சிறுத்தை, யானை, கரடி, செந்நாய், கழுதைப்புலி, காட்டெருமை, மான் உள்ளிட்ட பல்வேறு வகையான விலங்குகள் வசிக்கின்றன. இவ்வனப்பகுதி வழியாக தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலத்தை இணைக்கும் திண்டுக்கல்- பெங்களுரு தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இருமாநிலத்தை இணைக்கும் முக்கிய சாலை என்பதால் 24 மணி நேரமும் இதில் வாகனப்போக்குவரத்து நடைபெற்று வருகிறது. சாலையின் இருபுறமும் அடர்ந்த வனப்பகுதி என்பதால் வனவிலங்குகள் அவ்வப்போது சாலையை கடந்து மற்றொரு வனப்பகுதிக்கு செல்வது வழக்கம்.
இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு 12 மணியளவில் சத்தியமங்கலத்திலிருந்து மைசூர் செல்வதற்காக அரசு பஸ் பண்ணாரிஅம்மன் கோயிலைக்கடந்து வனச்சாலை வழியே சென்றுகொண்டிருந்தது.

அப்போது திடீரென வனப்பகுதியிலிருந்து புலி ஒன்று வெளியேறி சாலைக்கு வந்ததைக்கண்டு அதிர்ச்சியடைந்த டிரைவர் பஸ்சை நிறுத்தினார். புலி சாலையை கடப்பதைக்கண்டு எதிரே வந்த வாகனமும் நிறுத்தப்பட்டது. புலி மெதுவாக சாலையை கடந்து வனப்பகுதிக்குள் சென்று மறைந்தது. பஸ்சிலிருந்த பயணிகள் சாலையை கடக்கும் புலியை  செல்போனில் படம் பிடித்தனர். நள்ளிரவில் புலி சாலையை கடந்து சென்றதை பார்த்த வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர்.  இரவு நேரத்தில் வனவிலங்குகள் சாலையை கடப்பதால் வாகன ஓட்டிகள் வனச்சாலையில் மிதமான வேகத்தில் இயக்கவேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • TokyoOlympicTorch

    2020 ஒலிம்பிக் போட்டிக்கு தீவிரமாக தயாராகி வரும் டோக்கியோ..: புதிய ஒலிம்பிக் ஜோதி கோப்பை அறிமுகம்

  • newzealandattack

    நியூசிலாந்து மசூதி துப்பாக்கிச் சூடு : உயிரிழந்தவர்களின் உடல்கள் ஒரே இடத்தில் புதைக்கப்பட்டது

  • PhilipinesWhalePlastic

    இறந்த நிலையில் கரை ஒதுங்கிய திமிங்கலத்தின் வயிற்றில் 40 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள்: ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி

  • StalinElectionCampaign19

    தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார் மு.க.ஸ்டாலின்..தஞ்சாவூர் பொதுக்கூட்டத்தில் அலைகடலென திரண்ட மக்கள்: புகைப்படங்கள்

  • NorwayUnderRestaurant

    ஐரோப்பாவின் முதல் கடலுக்கடியில் இயங்கும் உணவகம்...நார்வே நாட்டில் துவக்கம்: பிரம்மிப்பூட்டும் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்