SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கொள்முதல் விலையை உயர்த்தாததால் தனியாருக்கு விற்கும் நிலை ஆவின் பாலுக்கு தட்டுப்பாடு அபாயம்

2018-03-19@ 01:05:13

சென்னை: நான்கு ஆண்டுகளாக கொள்முதல் விலையை உயர்த்தாததால், பால் முகவர்கள் தனியாருக்கு விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால், தமிழகத்தில் ஆவின்பாலுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.  ஆவின் நிர்வாகம் பால்முகவர்கள் மற்றும் விவசாயிகளிடம் இருந்து பாலை தினமும் கொள்முதல் செய்து வருகிறது. தமிழகம் முழுவதும் ஒரு நாளைக்கு 2 கோடி லிட்டர் பால் உற்பத்தியாகிறது. இதில், ஆவின் நிறுவனம் ஒரு நாளைக்கு 33 லட்சம் லிட்டர் பாலை விவசாயிகள் மற்றும் பால்முகவர்களிடம் இருந்து கொள்முதல் செய்து விற்பனை செய்வதும் மீதமுள்ள பாலை நெய், பால்ேகாவா, தயிர் போன்ற பால் சம்பந்தப்பட்ட பொருட்கள் உற்பத்திக்கும் பயன்படுத்துகின்றனர்.

ஆனால், தற்போது 30 லட்சம் லிட்டர் தான் கொள்முதல் செய்கின்றனர். கடந்த 2014ம் ஆண்டு தான் பாலின் விலை உயர்த்தப்பட்டு பசும்பால் ₹28, எருமை பால் 35 என்றும் நிர்ணயம் செய்தனர். நகரங்களில் இந்த விலை கொடுத்து வாங்கினாலும் கிராமபுறங்களில் இன்னும் குறைந்த விலைக்கு தான் வாங்கப்படுகின்றனர். அதன்பின் 4 ஆண்டுகள் ஆகியும் இதுவரை பாலின் விலை உயர்த்தப்படவில்லை. ஆனால் மாட்டுத்தீவனங்கள் மற்றும் பராமரிப்பு செலவுகள், கலப்பிண தீவனங்கள் உயர்ந்துள்ள நிலையில் கொள்முதல் விலையை மட்டும் இதுவரை உயர்த்ததால் ஆவின் நிறுவனத்துக்கு பால் வழங்க விவசாயிகள் மற்றும் பால்முகவர்கள் தயங்குகின்றனர்.

தர்மபுரி, சேலம், கோவை போன்ற பகுதிகளில் இருந்து தான் அதிக பால் கொள்முதல் செய்கின்றனர். ஆனால், தற்போது அங்கு வறட்சி காரணமாக மாட்டுதீவனங்கள் தட்டுபாடு ஏற்பட்டுள்ளது. அதனால் மாட்டுத்தீவனங்கள் மற்றும் கலப்பின தீவனங்கள் கிடைக்காமல் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டியுள்ளது. மாட்டுத்தீவனங்களை அதிக விலை கொடுத்து வாங்கி விட்டு குறைவான விலைக்கு பாலை கொடுக்க கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அதிக விலை கொடுத்து வாங்கும் தனியார் நிறுவனங்களுக்கு பாலை வழங்க வேண்டிய  நிலை ஏற்படும் போது ஆவின் நிறுவனத்துக்கு பால் தட்டுப்பாடுகள் ஏற்படும். பால் உற்பத்தி குறையும் போது தனியார் நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு பாலை அதிக விலை கொடுத்து வாங்கும் போது விவசாயிகள் மற்றும் பால்முகவர்கள் தனியார் நிறுவனத்தை தேடி செல்லக்கூடிய நிலை உருவாகும்.

எனவே, அரசு மற்றும் ஆவின் நிர்வாகம் தலையிட்டு பால் தட்டுப்பாடு அபாயத்தை போக்க பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க நடவடிக்ைக எடுக்க வேண்டும் என்று பால் முகவர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து பால் முகவர்கள் தொழிலாளர் நலச்சங்க தலைவர் பொன்னுச்சாமி கூறியதாவது: மாட்டுத் தீவனங்கள் மற்றும் பராமரிப்பு செலவுகள் ஒவ்வொரு வருடமும் அதிகரித்து கொண்டு இருக்கிறது. ஆனால் 4 வருடங்கள் ஆகியும் பால் கொள்முதல் விலையை மட்டும் உயர்த்தாமல் ஏற்கனவே நிர்ணயம் செய்யப்பட்ட பசும்பால் 28, எருமை பால் 35 தான் கொள்முதல் செய்கின்றனர். அவ்வாறு நிர்ணயம் செய்தாலும் அதே விலைக்கு பால் கொள்முதல் செய்வதில்லை. பாலில் கொழுப்பு பொருட்கள் குறைவாக இருப்பதாக கூறி நிர்ணயக்கப்பட்ட விலையை விட குறைந்த விலைக்கே வாங்குகின்றனர்.

மாட்டுத் தீவணங்கள் உயர்த்திருக்கும் போது கொள்முதல் விலையை மட்டும் உயர்த்தாமல் இருப்பது விவசாயிகள் மாடுகளை அடிமாட்டு விலைக்கு விற்க வேண்டிய நிலை ஏற்படும். இந்த நிைல தொடர்ந்தால் மாடுகள் இல்லாமல் அழிந்துவிடும். ேமலும், ஆவின் நிறுவனத்துக்கு வழங்கும் பாலை தனியார்க்கு விற்கக் கூடிய நிலை ஏற்படும். இந்த பட்ஜெட்டில் அறிவிப்பு வரும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் ஏமாற்றமளிக்கும் பட்ஜெட்டாக அமைந்துள்ளது. எனவே பால் தட்டுபாடுகளை போக்க அரசு மற்றும் ஆவின் நிர்வாகம் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு பொன்னுச்சாமி கூறினார்.

* தர்மபுரி, சேலம், கோவை போன்ற பகுதிகளில் இருந்து தான் அதிக பால் கொள்முதல்  செய்யப்படுகின்றனர். ஆனால், தற்போது அங்கு வறட்சி காரணமாக மாட்டுதீவனங்கள்  தட்டுபாடு ஏற்பட்டுள்ளது.
* மாட்டுத் தீவனங்கள் உயர்த்திருக்கும் போது கொள்முதல் விலையை மட்டும்  உயர்த்தாமல் இருப்பது விவசாயிகள் மாடுகளை அடிமாட்டு விலைக்கு விற்க வேண்டிய நிலை  ஏற்படும். இந்த நிைல தொடர்ந்தால் மாடுகள் இல்லாமல் அழிந்துவிடும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • FallFoilageWorld

    உலகின் பல்வேறு நாடுகளில் எடுக்கப்பட்ட இலையுதிர் காலத்தின் அழகிய புகைப்படங்கள்

  • WillaHurricaneMexico

    மெக்சிகோவை மிரட்டவிருக்கும் வில்லா புயல்: முன்னேற்பாடு பணிகள் தீவிரம்

  • italyrain

    இத்தாலியில் பெய்த ஆலங்கட்டி மழை : பனிக்கட்டிகள் இறுகி பாறை போல் காட்சியளித்த சாலைகள்

  • 23-10-2018

    23-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • longestseabridge

    உலகில் எங்கும் இல்லாத தனிச்சிறப்புடன் கட்டி முடிக்கப்பட்ட உலகின் நீளமான கடல் பாலம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்