SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாததால் குண்டும், குழியுமான அத்திப்பட்டு சாலை: வாகன ஓட்டிகள் கடும் அவதி

2018-03-19@ 01:03:06

அம்பத்தூர்: அம்பத்தூர் மண்டலத்தில் அத்திப்பட்டு பிரதான சாலை பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் குண்டும், குழியுமாக மாறி இருப்பதால் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் தினமும் அவதிப்பட்டு சென்று வருகின்றனர். அம்பத்தூர் மண்டலம் 86வது வார்டில் அத்திப்பட்டு பிரதான சாலை அமைந்துள்ளது. இந்த சாலை பல ஆண்டுகளுக்கு முன்பாக, அம்பத்தூர் நகராட்சியில் அடங்கி இருந்தபோது தார் சாலையாக போடப்பட்டது. பின்னர் சாலையில் பாதாள சாக்கடை திட்டம், மழைநீர் கால்வாய் பணிகளுக்காக பள்ளம் தோண்டப்பட்டது. அதன்பிறகு புதிதாக சாலை அமைக்கப்படவில்லை.
இதன் காரணமாக இச்சாலை குண்டும், குழியுமாக மாறி உள்ளதால் இரு சக்கர வாகன ஓட்டிகள், முதியோர், பெண்கள், சிறுவர்கள் நாள்தோறும் பள்ளங்களில் விழுந்து, அவதிப்பட்டு தான் நடந்து சென்று வருகின்றனர்.

சாலைகள் மோசமாக உள்ளதால் அவசர தேவைக்கு ஆட்டோக்கள், கார்கள் வர முடியாத நிலை ஏற்பட்டு, மருத்துவமனைக்கு நோயாளிகளை அழைத்து செல்வதில் பல்வேறு சிரமங்களை சந்திக்க வேண்டிய நிலையாக இருக்கிறது. குண்டும் குழியுமான சாலையில் போலீசாரும் ரோந்து பணியில் ஈடுபட முடியாமல் உள்ளனர். இதை சாதகமாக்கிக் கொண்டு கொள்ளையர்கள் திருட்டு செயலில் கைவரிசை காட்டி வருகின்றனர். இதுகுறித்து பொதுநலச்சங்கள் சார்பில் பலமுறை மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகார் அளித்தும் அம்பத்தூர் மண்டல அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியமாக உள்ளனர். இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகளின் சிரமங்கள் நாளுக்குநாள் அதிகரித்தபடியே உள்ளது.

இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள் சிலர் கூறுகையில், ‘‘அத்திப்பட்டு பிரதான சாலை பல ஆண்டாக சேதமடைந்து கிடக்கிறது. 50 அடி அகலம் கொண்ட இந்த சாலை ஆக்கிரமிப்பால் சுருங்கி போய் உள்ளது. இதனால் சாலையில் ஆக்கிரமிப்பை அகற்றிவிட்டு புதிய சாலை அமைக்க வேண்டுமென பொதுமக்கள் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொரடப்பட்டது. நீதிமன்றமும் ஆக்கிரமிப்பை அகற்றிவிட்டு சாலை போட உத்தரவிட்டது.
ஆனால், ஆக்கிரமிப்பாளர்கள் சார்பில் சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றக் கூடாது என்று வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கு நிலுவையில் உள்ளதால் சாலை போடப்படாமல் கிடப்பில் கிடக்கிறது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் வழக்கை முடித்து அத்திப்பட்டு பிரதான சாலையை விரைவில் சீரமைக்க வேண்டும்’’ என்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • mumbai_1010ganeshidole

  மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற விநாயகர் ஊர்வலம் - ஆயிரக்கணக்கான சிலைகள் கரைப்பு

 • sikimairportmodi

  சிக்கிம் மாநிலத்தின் முதல் விமான நிலையம் : பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்

 • puppies_formation12345

  சிலியில் சுதந்திர தின அணிவகுப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற காவல்துறை நாய்க்குட்டிகள் !

 • philipines_landslidesaccid

  பிலிப்பைன்ஸ் நாட்டில் மீண்டும் நிலச்சரிவு - 29 பேர் உயிரிழப்பு !

 • tanzinaship_accid2121

  டான்ஸானியாவில் படகு விபத்து - உயிரிழந்தோர் எண்ணிக்கை 136 ஆக அதிகரிப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்