SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

64 வங்கிகளில் கேட்பாரற்று கிடக்கிறது 11,300 கோடி

2018-03-19@ 00:35:11

பெங்களூரு: நாட்டின் 64 வங்கிகளில் சுமார் 3 கோடி கணக்குகளில் ரூ.11,300 கோடி பணம் கேட்பாரற்று கிடப்பதாக ரிசர்வ் வங்கி தகவல்  வெளியிட்டுள்ளது. வங்கிகள் ஒழுங்குமுறை சட்டம் 1949, பிரிவு 26ன் கீழ், 10 ஆண்டுகளுக்கு மேல் செயல்படாமல் இருக்கும் கணக்குகளின் விவரங்களை அனைத்து  வங்கிகளும் ரிசர்வ் வங்கிக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இது ஒவ்வொரு ஆண்டும் முடிவடைந்த பிறகு 30 நாட்களுக்குள் இந்த அறிக்கையை  வங்கிகள் சமர்ப்பிக்க வேண்டும்.

அதன்படி தற்போது நாடு முழுவதும் 64 வங்கிகளில் சுமார் 3 கோடி கணக்குகளில் ரூ.11,300 கோடி கேட்பாரற்று கிடப்பதாக ரிசர்வ் வங்கி வெளியிட்ட  அறிக்கையில் தெரியவந்துள்ளது. இதில் அதிகபட்சமாக பாரத ஸ்டேட் வங்கியில் மட்டுமே ரூ.1262 கோடி கிடக்கிறது. பஞ்சாப் நேஷனல் வங்கியில்  ரூ.1,250 கோடி இருக்கிறது. பொதுத்துறை வங்கிகளில் மட்டுமே ரூ.7,040 கோடி அனாதையாக கிடக்கிறது.

அதே நேரத்தில், இது இந்தியாவில் வங்கிகள் கையாளும் ஒட்டுமொத்த டெபாசிட்டில் ஒரு சிறு அளவே ஆகும். வங்கிகளில் ஒட்டுமொத்த டெபாசிட்  ரூ.100 லட்சம் கோடியை தாண்டும் என கூறப்படுகிறது. தனியார் வங்கிகளைப் பொறுத்தவரை, ஆக்சிஸ், டிசிபி, எச்டிஎப்சி, ஐசிஐசிஐ, இன்டஸ்இன்ட்,  கோடக் மகிந்திரா, யெஸ் வங்கி ஆகியவற்றில் மட்டும் ரூ.824 கோடி  பணம் கேட்பாரற்று கிடக்கிறது. மற்ற 12 தனியார் வங்கிகளில் ரூ. 592  கோடியும், ஒட்டுமொத்தமாக தனியார் வங்கிகளில் ரூ.1416 கோடி பணமும் கேட்பாரற்று கிடக்கிறது.
தனியார் வங்கிகளில் அதிகபட்சமாக ஐசிஐசிஐயில் ரூ.476 கோடியும், கோடக் மகிந்திரா வங்கியில் ரூ.151 கோடி யும் இருக்கின்றன. வெளிநாட்டு  வங்கிகளில் இந்த எண்ணிக்கை குறைந்த அளவே உள்ளது. 25 வெளிநாட்டு வங்கிகளில் ரூ.332 கோடியும், அதிபட்சமாக எச்எஸ்பிசி வங்கியில் ரூ.105  கோடியும் கேட்பாரற்று இருக்கிறது.

பினாமிகள் பணமா?
பெங்களூர் ஐஐஎம் முன்னாள் பேராசாரியர் சரண் சிங் கூறுகையில்,  ‘‘வங்களில் கேட்பாரற்று கிடக்கும் டெபாசிட்களின் சொந்தக்காரர்கள்  இறந்திருக்கலாம் அல்லது அவர்களுக்கு பல கணக்குகள் இருப்பதால் கவனிக்காமல் கூட இருந்திருக்கலாம். அதுதவிர, இவை பினாமி பணமாகவோ,  சட்டவிரோதமாக சேர்ந்த கருப்பு பணமாகக்  கூட இருக்கலாம். அதற்கு வாய்ப்புகள் குறைவே. அதேசமயம், பிரிவு-26ஏ-வின் படி 10ஆண்டுகள்  செயல்படாத கணக்காக இருந்தாலும், கணக்கின் உரிமையாளர்கள் வந்து கேட்கும்போது, அந்த பணத்தை தராமல் வங்கிகள் மறுக்க முடியாது. பணத்தை  திருப்பி அளிக்க வேண்டியது வங்கியின் பொறுப்பாகும்’’ என்றார்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • france_park_machine

    பிரான்ஸ் நாட்டில் ஹாலிவுட் படக்காட்சிகளை போல் வடிவமைக்கப்பட்ட எந்திர பூங்கா!

  • madurai_meenut11

    மதுரை மீனாட்சி அம்மன் சித்திரை திருவிழா: மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடையுடன் விதி உலா

  • berlin_bomb_war

    இரண்டாம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட சக்திவாய்ந்த வெடிகுண்டு, பெர்லின் நகரில் கண்டுபிடிப்பு!

  • 10schooldata

    10ம் வகுப்பு பொதுதேர்வு நிறைவு எதிரொலி : மாணவர்கள் கலர் தூவி பிரியா நட்பை வெளிப்படுத்தி மகிழ்ந்தனர்

  • governor_palace11

    பெண்களை இழிவுப்படுத்தும் ஹெச்.ராஜா, எஸ்.வி. சேகரை கண்டித்து ஆளுநர் மாளிகை முற்றுகையிட்டு போராட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்