SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

நெடுஞ்சாலை பார்களுக்கு தடையால் ஊற்றிக் கொண்ட பீர் விற்பனை

2018-03-19@ 00:31:53

புதுடெல்லி: நெடுஞ்சாலைகள் அருகே மதுக்கடை பார்களை மூட உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவால் பீர் விற்பனை கடந்த ஆண்டு சரிவை  சந்தித்துள்ளது.தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் விபத்து அதிகரிக்க மது விற்பனையே முக்கிய காரணம் என்பதால், நெடுஞ்சாலைகளில் இருந்து 500 மீட்டர்  தொலைவில் உள்ள பார்களை மூட உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை தொடர்ந்து நாடு முழுவதும் பல இடங்களில் மதுபார்கள் மூடப்பட்டன.  இதனால் மதுபான விற்பனை, குறிப்பாக பீர் விற்பனை குறைந்துள்ளது புள்ளி விவரம் மூலம் தெரியவந்துள்ளது.

 மதுபானங்களில் பீர் வகைகளுக்கு எப்போதுமே மவுசு உண்டு. ஆனால், நெடுஞ்சாலை அருகே மதுவிற்பனை கூடாது என்ற உத்தரவால் கடந்த  ஆண்டில் 25.91 கோடி கேஸ் பீர்கள் விற்பனை செய்யப்பட்டன. இதற்கு முந்தைய ஆண்டில் இது 28.79 கேஸ்களாக இருந்தது. அதாவது பீர் விற்பனை  10 சதவீதம் சரிந்துள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் இது தொடர்ந்து 2வது ஆண்டாக ஏற்பட்ட சரிவாகும் என பீர் தயாரிப்பு நிறுவனங்கள்  தெரிவிக்கின்றன. 2012ல் 26.05 கோடி கேஸ்கள், 2013ல் 26.78 கோடி, 2014 27.77 கோடி, 2015ல் 28.91 கோடி கேஸ்கள் விற்பனையாகின.  நாட்டின் ஒட்டுமொத்த மது  விற்பனையில் கேரளா, பீகார், தமிழ்நாடு 20 சதவீத பங்களிப்பை கொண்டுள்ளன.

பீர் விற்பனை சரிவுக்கு உச்ச நீதிமன்ற உத்தரவு மட்டுமின்றி சில  மாநிலங்களில் மது பானம் மற்றும் பீர் விலை அதிகரித்ததும் முக்கிய காரணம். பீர் விற்பனையில் முதலிடத்தில் உள்ள மகாராஷ்டிராவில், கடந்த  ஆண்டு பீர் மீதான கலால் வரி 17 சதவீதம் உயர்த்தப்பட்டது. பின்னர் டிசம்பரில் நிறுவனங்கள் விலையை உயர்த்தி அறிவித்தன. இதுவும் விற்பனை  சரிவுக்கு காரணமாக கருதப்படுகிறது.

† * நெடுஞ்சாலைகள் அருகே உள்ள மதுக்கடை பார்கள் மூடப்பட்டதால் பீர் விற்பனை சரிந்துள்ளது.
† * கடந்த 20 ஆண்டுகளில் பீர் விற்பனையில் 2வது ஆண்டாக ஏற்பட்ட விற்பனை சரிவு இது.
† * பீர் விற்பனையில் முதலிடத்தில் மகாராஷ்டிரா உள்ளது.
† * நாட்டின் ஒட்டுமொத்த மது விற்பனையில் தமிழகம், கேரளா, பீகார் ஆகியவை 20 சதவீத பங்களிப்பை கொண்டுள்ளன

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-09-2018

    23-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 22-09-2018

    22-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • muharamfest

    நாடு முழுவதும் இஸ்லாமியர்களின் மொஹரம் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது

  • nasaevanaktrump

    அமெரிக்காவில் உள்ள நாசாவின் ஜான்சன் விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட்ட இவாங்கா டிரம்ப்

  • florence&trumph

    பிளோரென்ஸ் புயலால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்