SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

குடிநீர், கழிவறை, நிழற்கூரை இல்லாத வேலூர் டவுன் ரயில் நிலையம் சுட்டெரிக்கும் வெயிலில் தவிக்கும் பயணிகள்

2018-03-14@ 22:15:59

வேலூர்: தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்டத்திற்கு உட்பட்ட ரயில் நிலையங்களின் பட்டியலில் கடைக்கோடியாக வேலூர் டவுன் ரயில் நிலையம் உள்ளது. திருவண்ணாமலை, விழுப்புரம் வழியாக தென் மாவட்டங்களுக்கும்,  அரக்கோணம், சென்னை மற்றும் ஆந்திர மாநிலம் திருப்பதி வழியாக வடமாநிலங்களுக்கும் வாராந்திர மற்றும் சிறப்பு ரயில்கள் என நாளொன்றுக்கு சுமார் 15க்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்படுகின்றன. வேலூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்த பள்ளி கல்லூரி மாணவர்கள், அலுவலக ஊழியர்கள், வியாபாரிகள், பொதுமக்கள் என 200க்கும் மேற்பட்ட விழுப்புரம்-திருப்பதி பாசஞ்சர் ரயிலை வெகுவாக பயன்படுத்தி வருகின்றனர். கால அட்டவனையின்படி குறித்த நேரத்திற்கு மட்டுமே ரயில்கள் இயக்கப்படுவதால் ஏராளமான பயணிகள் ரயில் நிலையத்தில் காத்துக்கிடந்து பயணம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் வேலூர் டவுன் ரயில் நிலையத்தில் பயணிகளுக்கான அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை. பிளாட்பாரத்தில் உள்ள குடிநீர் குழாய்கள் அனைத்தும் காட்சி பொருளாகவே உள்ளது. பிளாட்பாரத்தில் நிழற்கூரை இல்லாமல் திறந்தவெளியாக உள்ளது. இதனால் ரயிலுக்காக காத்திருக்கும் பயணிகள் சுட்டெரிக்கும் வெயிலில் தவிக்கின்றனர். மேலும் குடிநீரை தேடி அலைகின்றனர். மேலும் ரயில் நிலையத்தில் கட்டப்பட்டுள்ள கழிவறைகளும் பயன்பாட்டில் இல்லை. ரயில் நிலைய வளாகம் முழுவதும் முட்புதர்கள் மண்டிக்கிடக்கிறது. மின் விளக்குகள் பழுதாகிக் கிடப்பதால் இரவு நேர ரயிலுக்காக காத்திருக்கும் பயணிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. இதுகுறித்து பயணிகள் கூறுகையில், ‘நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்களை சீரமைப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய ரயில்வே துறை தீவிரமாக மேற்கொண்டுள்ளது.

 வணிக ரீதியாக முதல் தரவரிசை பட்டியலில் இடம்பிடித்துள்ள முக்கிய ரயில் நிலையங்களில் நகரும் மின்படிக்கட்டு, மின் தூக்கி, இலவச அதிவேக இணையதள சேவை, கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு வருகிறது.ஆனால் வேலூர் டவுன் ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள்கூட இல்லை. பிளாட்பாரத்தில் உள்ள கழிப்பறைகள் பூட்டிக்கிடப்பதால் பெண்கள், முதியவர்கள் அவசர காலங்களுக்கு பயன்படுத்த முடியாமல் தவிக்கின்றனர். எனவே, வேலூர் டவுன் ரயில் நிலையம் வணிக ரீதியாக சற்று பின் தங்கினாலும், ரயில் சேவையை பயன்படுத்தி வரும் பயணிகளின் நலன் கருதி அடிப்படை கட்டமைப்பு வசதிகளான குடிநீர், நிழற்கூரைகள், பயணிகள் ஓய்வு அறை, கழிப்பறை உள்ளிட்டவைகளை அமைக்க ரயில்வே அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், பாதுகாப்பு போலீசாரை பணியமர்த்தி பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும், என்பதே பயணிகளின் நீண்டநாள் கோரிக்கையாக உள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 16-12-2018

  16-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • lisbon_tramp11

  லிஸ்பனில் டிராம் ரயில் தடம் புரண்டு விபத்து : 28 பேர் காயம்

 • 15-12-2018

  15-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • AmazonIllegalMining

  அமேசான் மழைக்காடுகளில் தங்கம் எடுக்க சட்டவிரோதமாக தோண்டப்படும் சுரங்கங்கள்..: போலீசார் தீவிர சோதனை

 • chinasnowfall

  கடும் பனிப்பொழிவால் வெண் போர்வை போர்த்தியது போல காணப்படும் சீனாவின் கண்கவர் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்