SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பேஸ்புக்கில் விளம்பரம் செய்து 23 கிளிகளை விற்க முயன்றவர் கைது

2018-03-14@ 22:14:02

நெல்லை: பாளையங்கோட்டை அருகே கீழநத்தம் சண்முகவிலாஸ் தெருவைச் சேர்ந்தவர் ராஜகோபால்(23). இவர் ஆரல்வாய்மொழி காற்றாலை நிறுவனத்தில் கள ஊழியராக பணியாற்றி வந்துள்ளார். தற்போது காற்றாலையில் வேலையில்லாததால் ஊரில் கிடைக்கும் கூலி வேலைகளை செய்து வருகிறார். சமீபத்தில் தனது பேஸ்புக்கில் ‘அழகான பச்சைக்கிளிகள் விற்பனைக்கு உள்ளன. எனது செல்ேபான் எண்ணில் அணுகவும்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.இதை சென்னையை சேர்ந்த வனவிலங்கு குற்ற கட்டுப்பாட்டு பணியகம் (டபிள்யூசிசிபி) அதிகாரிகள் பார்வையிட்டு நெல்லையை சேர்ந்த வனப்பாதுகாப்பு குழுவிற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் நெல்லை வனப்பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு குழு வனச்சரகர் செந்திவேல் முருகன், வனவர் செந்தில், வனக்காப்பாளர் சந்தோஷ்குமார், நெல்லை சரக வனவர் சரவணக்குமார், வனக்காப்பாளர்கள் மதியழகன், காந்திமதிநாதன் ஆகியோர் அடங்கிய குழுவினர் கிளி விற்பனையாளரை பிடிக்க சென்றனர்.

செல்போனில் பேசிய தகவல் அடிப்படையில் அவர் வண்ணார்பேட்டை சாலைத்தெருவில் உள்ள ஒரு ஓட்டல் முன்பு கிளிகளை விற்பது தெரிய வந்தது. வனத்துறையினர் அங்கு சென்று ராஜகோபாலை கைது செய்தனர். அவரிடம் இருந்து 23 பச்சைக்கிளி குஞ்சுகள் பறிமுதல் செய்யப்பட்டன. கிளி விற்பனைக்கு பயன்படுத்திய ஒரு பைக்கும் பறிமுதல் செய்யப்பட்டது.ராஜகோபால் வனத்துறையிடம் அளித்த வாக்குமூலத்தில் வேலையின்மை காரணமாக பாலாமடை, ராஜவல்லிபுரம் பகுதியில் தென்னை மரங்களில் ஏறி கிளிக்குஞ்சுகளை பிடித்து விற்பனை செய்து வந்ததாக ஒப்புக்கொண்டார். அவருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.இதுகுறித்து வனப்பாதுகாப்புத்துறை மற்றும் கண்காணிப்புக்குழு உதவி வனப்பாதுகாவலர் முருகானந்தம் கூறுகையில், ‘‘வன உயிரின பாதுகாப்பு சட்டம் 1972ன் பிரிவு 4ன்படி கிளிகளும் பாதுகாக்கப்பட்ட ஒரு உயிரினமாகும்.

அவற்றை வேட்டையாடுவதோ, பிடித்து விற்பனை செய்வதோ சட்டப்படி குற்றமாகும். நெல்லை மாவட்டத்தில் சில இடங்களில் கிளிகளை வைத்து விற்பதாக தகவல்கள் வருகின்றன. வியாபார நோக்கில் அவற்றை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதுதொடர்பான புகார்களை எங்கள் அலுவலக எண் 0462-2551800 என்ற எண்ணிலோ அல்லது மண்டல துணை இயக்குநர், டபிள்யூசிசிபி, C2A, ராஜாஜி பவன், பெசன்ட்நகர், சென்னை-90 என்ற முகவரிக்கோ அளிக்கலாம்’’ என்றார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 16-12-2018

  16-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • lisbon_tramp11

  லிஸ்பனில் டிராம் ரயில் தடம் புரண்டு விபத்து : 28 பேர் காயம்

 • 15-12-2018

  15-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • AmazonIllegalMining

  அமேசான் மழைக்காடுகளில் தங்கம் எடுக்க சட்டவிரோதமாக தோண்டப்படும் சுரங்கங்கள்..: போலீசார் தீவிர சோதனை

 • chinasnowfall

  கடும் பனிப்பொழிவால் வெண் போர்வை போர்த்தியது போல காணப்படும் சீனாவின் கண்கவர் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்