SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சாலை, நடைபாதையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பழுதான வாகனங்களை 15 நாளில் அப்புறப்படுத்தாவிட்டால் பறிமுதல்: சென்னை மாநகராட்சி எச்சரிக்கை

2018-03-14@ 21:12:17

சென்னை: சாலைகள், நடைபாதைகள் மற்றும் தெருக்களில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள பழுதானவாகனங்களை 15 நாட்களுக்குள் அப்புறப்படுத்தாவிட்டால் பறிமுதல் செய்து ஏலம் விடப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இரண்டு, மூன்று மற்றும் நான்கு சக்கர வாகன உரிமையாளர்கள் உபயோகமற்ற, பழுதடைந்த வாகனங்களை சாலையோரங்கள், நடைபாதைகள் மற்றும் தெருக்களில் நிறுத்தி வைத்துள்ளனர்.

இதனால் பொதுமக்களுக்கு இடையூறும் போக்குவரத்துக்கு பாதிப்பும் ஏற்படுகிறது. அவ்வாறு நிறுத்தப்படும் வாகனங்களில் மழைநீர் தேங்கி கொசு உற்பத்தியும், பொது சுகாதாரச் சீர்கேடும் ஏற்படுகிறது என பல்வேறு புகார்கள் பெறப்பட்டு வருகிறது.அதனைத் தடுத்திடும் வகையில் சாலையோரங்கள், நடைபாதைகள் மற்றும் தெருக்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள உபயோகமற்ற, பழுதடைந்த வாகனங்களின்  உரிமையாளர்கள்,   இவ்வறிவிப்பு வெளியிடப்பட்ட  15  நாட்களுக்குள்  உடனடியாக அப்புறப்படுத்த கேட்டுக் கொள்ளப்படுகிறது.

அவ்வாறு குறிப்பிட்ட காலத்திற்குள் அகற்றப்படாத வாகனங்களை பெருநகர சென்னை மாநகராட்சி, சென்னை பெருநகர காவல்துறை உதவியுடன் அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளும். அதை தொடர்ந்து, இந்த வாகனங்கள் ஏலம் விடப்படும்.எனவே, பொதுமக்கள் சாலையோரங்கள், நடைபாதைகள் மற்றும் தெருக்களில் நிறுத்தி வைத்துள்ள உபயோகமற்ற மற்றும் பழுதடைந்த வாகனங்களை, தாங்களாகவே முன்வந்து உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • TeacherTransfer

    ஆசிரியரின் பணியிட மாற்றத்தை எதிர்த்து மாணவர்கள் பாசப் போராட்டம்: திருவள்ளூர் அருகே நெகிழ்ச்சி

  • GoatYogaAmerica

    ஆடுகளின் உதவியுடன் செய்யும் வினோத யோகா...அமெரிக்காவில் மிகவும் பிரபலம்!

  • SurinameRamnath

    அரசு முறைப் பயணமாக சூரினாம் சென்றுள்ள குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்: புகைப்படங்கள்..

  • ColorChangeinMrs

    புழுதி புயலால் நிறம் மாறிய செவ்வாய் கிரகம்: கியூரியாசிட்டி விண்கலம் எடுத்த புகைப்படம் வெளியீடு

  • Aurangzebarmynirmala

    ராணுவ வீரர் அவுரங்கசீப்பின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து நிர்மலா சீதாராமன் ஆறுதல்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்