SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

குரங்கணி காட்டுத்தீ தொடர்பாக விசாரிக்க ஐ.ஏ.எஸ். அதிகாரி அதுல்ய மிஸ்ரா நியமனம்: தமிழக அரசு

2018-03-14@ 18:02:21

சென்னை: குரங்கணி காட்டுத்தீ தொடர்பாக விரிவாக விசாரிக்க ஐ.ஏ.எஸ். அதிகாரி அதுல்ய மிஸ்ராவை தமிழக அரசு நியமித்துள்ளது. மலையேற்றத்தை வரைமுறைபடுத்துவது குறித்து அறிக்கை அளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. தேனி மாவட்டம் குரங்கணி அருகே கொழுக்குமலைப் பகுதிக்கு மலையேற்ற பயிற்சிக்கு சென்றவர்களில் 11 பேர் காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்தனர். மேலும் 15 பேர் மதுரை, சென்னை, கோவை உள்பட பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், கொழுக்குமலைப் பகுதிக்கு முறையாக அனுமதி பெறாமல், மலையேற்ற பயிற்சிக்கு சென்றதே உயிரிழப்புக்கு காரணம் என கூறப்பட்டது. இதையடுத்து, குரங்கணி சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்த வருவாய்த்துறை மற்றும் இயற்கை பேரிடர் மேலாண்மை முதன்மைச் செயலாளரான ஐ.ஏ.எஸ். அதிகாரி அதுல்ய மிஸ்ரா விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். விபத்துக்கு காரணமாக அமைந்த சூழ்நிலை குறித்து விசாரணை மேற்கொள்ளப்படவேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

மலையேற்றத்திற்கு அனுமதி அளித்தல் மற்றும் கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பான வனத்துறை விதிகள் ஆய்வு செய்யப்படவேண்டும் என்றும்,  மலையேற்ற பயிற்சிக்கு ஏற்பாடு செய்தவர்களின் பங்கு மற்றும் தவறுகள் உள்ளிட்டவை குறித்து விசாரணை செய்யவும் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. எதிர்காலத்தில் இதுபோன்ற விபத்துகள்  நேராமல் தடுப்பது குறித்து ஆய்வு செய்து பரிந்துரைகளை அளிக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணையை முடித்து 2 மாதங்களில் அறிக்கை மற்றும் பரிந்துரைகளை வழங்க வேண்டும் என்றும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-01-2019

    19-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • ChillaiKalanKashmir

    கடுமையான பனிப்பொழிவால் வெண் நிற ஆடை போர்த்தியது போல் காட்சியளிக்கும் காஷ்மீர்: கண்களை குளிர்விக்கும் புகைப்படங்கள்

  • bombblastcolombia

    கொலம்பியாவில் கார் வெடிகுண்டு வெடித்து விபத்து: 9 பேர் உயிரிழந்த பரிதாபம்!

  • chinafiredrone

    மின்கம்பிகளில் தொங்கும் குப்பைகளை அழிக்க தீயை உமிழும் ட்ரோன் சீனாவில் கண்டுபிடிப்பு!

  • horse_apain12

    விலங்குகளை சுத்தப்படுத்தும் திருவிழா : நெருப்புக்குள் குதிரைகளை செலுத்தும் ஸ்பெயின் மக்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்