SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

நாட்டிலேயே பணக்கார எம்.பி : ஜெயாபச்சனை பின்னுக்கு தள்ளிய மகேந்திர பிரசாத்

2018-03-14@ 17:41:00

பீகார்: நாட்டிலேயே பணக்கார எம்.பி.யாக ஐக்கிய ஜனதாதளத்தின் மாநிலங்களவை எம்.பியான மகேந்திர பிரசாத் தனது சொத்து மதிப்பு 4000 கோடி என அறிவித்துள்ளார். கிங் மகேந்திர என அழைக்கப்படும் மகேந்திர பிரசாத் 1985ஆம் ஆண்டு முதல் மாநிலங்களவை உறுப்பினராக இருந்து வருகிறார். இந்நிலையில் பீகார் மாநிலத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினராக போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ள இவர் பிரமாண பத்திரத்தில் தனது சொத்து மதிப்பு 4010 கோடியே 21 லட்சம் ரூபாய் என குறிப்பிட்டுள்ளார்.


2 மருத்துவ நிறுவனங்களுக்கு சொந்தக்காரரான மகேந்திர பிரசாத் எஸ்.பி.ஐ. வங்கியில் 2239 ரூபாய் மதிப்பிலான முதலீடுகளை வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார். 211 வெளிநாடுகளுக்கு சென்றுள்ளதாகவும்,பிரிட்டனுக்கு 53 முறையும், அமெரிக்காவுக்கு 10 முறை சென்றுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். 1000 கோடி ரூபாய் சொத்துள்ள ஜெயாபச்சன் தான் பணக்கார எம்.பி என்று கூறப்பட்ட நிலையில் மகேந்திர பிரசாத் தனது சொத்து மதிப்பு 4000 கோடி ரூபாய் என அறிவித்துள்ளது குறிப்பிடதக்கது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • muharamfest

    நாடு முழுவதும் இஸ்லாமியர்களின் மொஹரம் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது

  • nasaevanaktrump

    அமெரிக்காவில் உள்ள நாசாவின் ஜான்சன் விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட்ட இவாங்கா டிரம்ப்

  • florence&trumph

    பிளோரென்ஸ் புயலால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப்

  • greenlandicemelt

    கிரீன்லாந்தில் வெப்பமயமாதலால் உருகும் பனிப்பாறைகள் : கடல் நீர்மட்டம் உயரும் அபாயம்

  • thirupathilast

    திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ திருவிழா : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்